HomeGeneralசூர்யாவின் படத்தை இயக்கிய மித்துன் மாணிக்கம் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஃபேமிலி பாய்' திரைப்படத்தின் டீசர்...

சூர்யாவின் படத்தை இயக்கிய மித்துன் மாணிக்கம் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!

Published on

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் – (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார். அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP – Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.  சிலப்பதிகாரத்தில தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்… என தொடங்கும் இந்த டீசர்,  2020 ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒரு நாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும்…. இந்த டீசர் வெளிப்படுத்துகிறது. அத்துடன் இதன் பின்னணி இசை ,காட்சி அமைப்பு  என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Latest articles

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் 'என் சி 51' படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன்,...

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் OTT உரிமையைப் பெற்றது Amazon Prime Video.

மு. மாறன் எழுதியு இயக்கியுள்ள ஆக்‌ஷன் குடும்பப் படம் அப்பா குட்டி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி...

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட, வைபவ் நடிக்கும் ஆன்மிகமும் ஆக்‌ஷனும் கலந்த ‘மணிகண்டா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில்,...

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தில் ‘அப்பாவ போல’ ப்ரோமோ பாடல் 20 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை!

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’. க்ரைம் திரில்லர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த...

More like this