HomeGeneralஜோஜு ஜார்ஜ் இயக்கும் 'பரிபாடி' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் ‘பரிபாடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படம், பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிப்பதோடு, சுமார் 100 புதிய முகங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் அறிமுகமாகின்றனர். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திரிசூரை பின்னணியாக கொண்டு, முக்கியமாக சாலக்குடியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக, புதிய நடிகர்கள் சுமார் நான்கு மாத காலம் சிறப்பு பயிற்சிக்கு பிறகே கேமராவுக்கு முன்பு களமிறங்கினர். இப்படத்தில் நடிக்கும் சுமார் 100 புதிய முகங்களும் வசனம் பேசும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட திரையரங்க அனுபவத்தை தரும் வகையில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்திய சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, பிரபல தமிழ் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
மேலும், தென்னிந்தியாவின் பிரபல சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்களுடன் படத்தொகுப்பாளர் மனு ஆண்டனி மற்றும் சவுண்ட் டிசைனர் அஜயன் அதத் ஆகியோரும் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
2024-இல் வெளியாகி மாபெரும் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியையும், ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்ற ‘பனி’ படத்தை தொடர்ந்து, ஜோஜு ஜார்ஜ் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
‘மாலிகாபுறம்’, ‘2018’, ‘ரேகாசித்திரம்’, ‘ஆடு 3’ போன்ற வெற்றிகரமான படங்களை வழங்கிய காவ்யா ஃபிலிம் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

Latest articles

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

உற்சாகமாக நடந்த யோகி பாபு நடித்துள்ள ‘சிங்காரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ்....

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்! வித்தியாசமான புரமோஷனில் படக்குழு!

கன்னியாகுமரி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தூர்...

ஜி வி பிரகாஷ் – கயாது லோஹர் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கிய ‘Immortal’ அக்டோபர் 30-ம் தேதி Sony LIV-ல் பிரீமியராகிறது!

எதிர்பாராத சந்திப்பு, மர்மமான ஒரு பெண், மறைக்கப்பட்ட ரகசியம் எனப் பல திருப்பங்களுடன் வந்த திரைப்படம் 'Immortal'. காதல், மர்மம்...

More like this