HomeGeneralபா ஜ க எச். ராஜா – டாக்டர் எஸ். ராஜா நடிக்கும் ‘செய் செய்யாதே’...

பா ஜ க எச். ராஜா – டாக்டர் எஸ். ராஜா நடிக்கும் ‘செய் செய்யாதே’ அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது!

Published on

மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய சமூகத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம். மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் போன்ற முக்கியமான கருத்துகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, செவிலியர்களின் சேவை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தின் மீதான ஒவ்வொருவரின் பொறுப்பு ஆகியவற்றையும் வலுவாக எடுத்துரைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்குடன் சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எச். ராஜா – தமிழ்நாடு முதலமைச்சர்
டாக்டர் எஸ். ராஜா – டாக்டர் சந்திரபோஸ்
குரு விஜய் – டாக்டர் விஜய்
தர்ஷினி ரெட்டி – டாக்டர் விஜயலட்சுமி
பிரதிக்ஷா மனோ பிரசாந்த் – திவ்யா (குழந்தை நட்சத்திரம்)
சிதம்பரம் PDK – தங்கதுரை
மௌனிகா ப்ரீத்தி V – டாக்டர் மௌனிகா
தபிதா குணரத்னே – டாக்டர் பிரியா
தயாரிப்பு: ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்: சுப்புலட்சுமி ஜெயராம்  (B.Sc), California, USA
கதை / திரைக்கதை / வசனம் / இயக்கம்: டாக்டர் எஸ். ராஜா (M.D., USA)
ஒளிப்பதிவு: வாசு பி. ராம்நாத்
படத்தொகுப்பு: ராஜா முகமது
இசை: டாக்டர் எஸ். ராஜா & ஹரிணி சுப்பு மியூசிக் டீம்
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் கார்த்திக்
மக்கள் தொடர்பு: பா. சிவக்குமார்

Latest articles

கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

அதிகாரம், பாரம்பரியம், பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே...

அர்ஜுன் தாஸ் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஜான் டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட - பிரசாத் தேவினேனி ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா...

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பிரமாண்டமான OTT சீரிஸ்கள்… திரைப்படத் தயாரிப்பிலும் தீவிரமாகக் களமிறங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்!

விஜயதசமி நன்னாளான அக்டோபர் 20, 2026 அன்று, ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது புதிய படைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது....

ஹைக்கூ சினிமா விமர்சனம்

ஃபீல்குட் உணர்வில் மிதக்க விரும்புகிறவர்களுக்கான அழகிய படைப்பு. ஹீரோ கல்லூரிக் காலத்தில் சக மாணவியைக் காதலிக்க, நாட்கள் உற்சாகமாக நகர்கிறது....

More like this