HomeGeneralவிஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள 'ஜெய் ஜெய் கணேசா' விரைவில் தமிழுக்கு வருகிறது!

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள ‘ஜெய் ஜெய் கணேசா’ விரைவில் தமிழுக்கு வருகிறது!

Published on

முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகி, ஆந்திராவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஜெய் ஜெய் கணேசா’ திரைப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறார் ‘ஜே.ஜே மூவிஸ்’ விஜய் மாதவன்.

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள இந்த படத்தை உதய் பொம்மி செட்டி இயக்கியுள்ளார். நயன் சாரிகா, பிரகதி ஸ்ரீவத்ஷவா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, ராஜ் அருண் வில்லனாக நடித்திருக்கிறார்.

கணேஷ் தனது நண்பன் சங்கருடன் சேர்ந்து சிறு சிறு திருட்டுகளைச் செய்து வாழ்க்கை நடத்துகிறான்.
ஸ்ருதி என்ற பெண்ணைக் காதலிக்கும் கணேஷ், அவளைத் திருமணம் செய்து நல்ல வாழ்க்கை வாழ விரும்புகிறான். ஆனால் ஸ்ருதி பணத்துக்கு ஆசைப்பட்டு வேறொருவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள்.
இதனால் மனமுடையும் கணேஷ், பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைக்கிறான்.
அந்தச் சூழ்நிலையில், சுமார் ஏழு கோடி மதிப்புள்ள வைரத்தைத் திருடும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது. அதை கச்சிதமாக செய்து முடிக்கிறான் கணேஷ். அந்த வைரத்தை ஒரு விநாயகர் சிலைக்குள் மறைத்து வைக்கிறான்.
இதற்கிடையில், கிஷோர் ஆதவ் என்ற அரசியல்வாதி முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டு தனது அரசியல் கனவை நிறைவேற்றுவதற்காக 100 கோடியைக் கடத்தத் திட்டமிடுகிறான். ருத்ரா என்ற குற்றவாளியின் உதவியுடன் அந்தப் பணத்தை ஒரு பெரிய விநாயகர் சிலைக்குள் மறைத்து எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறான்.
சிலைகள் கைமாறுவதால் பெரிய குழப்பம் ஏற்படுகிறது. கணேஷ் தனது வைரத்தைத் தேடுகிறான். ருத்ராவும் அவனது கூட்டாளிகளும் தங்களது பணத்தைத் தேடுகிறார்கள்.
இரு தரப்பினரும் ஒரே கிராமத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை மையமாகக் கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள். இதில் ஏற்படும்  சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் திரைக்கதை.

படத்தில் துள்ளலிசை பாடல்கள், மனதை வருடம் மென்மையான பாடல்களுடன் சிலிர்ப்பூட்டும் சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

தயாரிப்பாளர் விஜய் மாதவன்
படக்குழு:-

ஆதித்யா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சேத்தன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். பாடல்களை சுவிஸ் தமிழ்மகள், பாமகன், ஜோ பைந்தமிழ் ஆகியோர் எழுத மக்கள் தொடர்பு பணிகளை வெங்கட் கவனித்து வருகிறார். ஏ.ஆர்.கே ராஜராஜா படத்தின் தமிழ் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

Latest articles

ரன்பீர் கபூர், யஷ் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் நடைபெறுகிறது!

ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர்...

தனது பிறந்தநாளில் ஏழை எளிய மக்கள் 5000 பேருக்கு பட்டுப்புடவை வழங்கத் தயாரான நடிகர் ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை:- லாரன்ஸ் அறக்கட்டளை தனது 20 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில்,...

160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற சாய் துர்கா தேஜின் ‘சம்பராலா ஏடி கட்டு’ பிரமாண்ட பான் இந்தியா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

மெகா சூப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், இயக்குநர் ரோஹித் KP, கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா...

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியது!

நம்பிக்கைக்குரிய இளம் கதாநாயகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா சமூகக் கற்பனைத் திரைப்படமான ‘கரிகாலா’, ...

More like this