HomeGeneralரன்பீர் கபூர், யஷ் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில்...

ரன்பீர் கபூர், யஷ் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் நடைபெறுகிறது!

Published on

ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் காட்சி அக்டோபர் 27 ஆம் தேதி மாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸின் டேவிட் கெஃபென் திரையரங்கில் நடைபெற உள்ளது. அழைப்பின் பேரில் மட்டுமே பங்கேற்கக்கூடிய இந்தப் பிரீமியர் நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள், திரைப்பட இயக்குநர்கள், சர்வதேச ஊடகத்தினர் மற்றும் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
திரைப்படங்களின் வரலாறு, கலை மற்றும் தொழில்நுட்பத்தைப் போற்றும் வகையில் செயல்பட்டு வரும் அகாடமி மியூசியம், இதற்கு முன்பு பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகளையும் ஆஸ்கர் விருது தொடர்பான கொண்டாட்டங்களையும் நடத்தியுள்ளது.
இந்தியாவின் போற்றப்படும் இதிகாசமான ராமாயணத்தை சர்வதேச ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் பிரீமியர் நிகழ்ச்சி படக்குழுவினருக்கு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. 945 பேர் அமரக்கூடிய அரங்கில், இப்படத்தின் 3D பிரீமியர் காட்சி திரையிடப்பட உள்ளது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி இந்தப் பிரீமியர் நடைபெறுவதால், இந்தியாவின் பண்டிகைக் கொண்டாட்ட உணர்வையும் லாஸ் ஏஞ்சல்ஸுக்குக் கொண்டு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி, சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்கள் பாரம்பரிய இந்தியப் பண்டிகை உடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ராமாயணா’ திரைப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், DNEG மற்றும் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளனர்.
இதன் முதல் பாகம் நவம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளியன்று வெளியாக உள்ளது. ‘ராமாயணா’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் இப்படம் திரையிடப்பட உள்ளது. இந்தியாவிற்கு வெளியே படத்தின் சர்வதேச விநியோகப் பணிகளை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

Latest articles

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள ‘ஜெய் ஜெய் கணேசா’ விரைவில் தமிழுக்கு வருகிறது!

முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகி, ஆந்திராவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஜெய் ஜெய் கணேசா' திரைப்படத்தை...

தனது பிறந்தநாளில் ஏழை எளிய மக்கள் 5000 பேருக்கு பட்டுப்புடவை வழங்கத் தயாரான நடிகர் ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை:- லாரன்ஸ் அறக்கட்டளை தனது 20 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில்,...

160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற சாய் துர்கா தேஜின் ‘சம்பராலா ஏடி கட்டு’ பிரமாண்ட பான் இந்தியா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

மெகா சூப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், இயக்குநர் ரோஹித் KP, கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா...

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியது!

நம்பிக்கைக்குரிய இளம் கதாநாயகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா சமூகக் கற்பனைத் திரைப்படமான ‘கரிகாலா’, ...

More like this