HomeCinemaநல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் நடக்கும் போராட்டமாக ‘ஸ்பார்க் L.I.F.E.' அமேசான் பிரைம் வீடியோவில் வெளியீடு!

நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் நடக்கும் போராட்டமாக ‘ஸ்பார்க் L.I.F.E.’ அமேசான் பிரைம் வீடியோவில் வெளியீடு!

Published on

‘இளம் நாயகன்’ விக்ராந்த், நடிகைகள் மெஹரின் பிர்சாதா மற்றும் ருக்ஷா தில்லான் நடிப்பில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘ஸ்பார்க் L.I.F.E.’

இளம் நாயகன் விக்ராந்த் கதையின் நாயகனாக அறிமுகமானதுடன், இப்படத்திற்கு கதை, திரைக்கதையும் அவரே எழுதி இருக்கிறார்.

படத்தில் நாசர், சுகாசினி மணிரத்னம், வெண்ணிலா கிஷோர், சத்யா, பிரம்மாஜி, ஸ்ரீகாந்த் ஐயங்கார், அன்னபூர்ணம்மா, சம்மக் சந்திரா, ராஜா ரவீந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌

இந்த படம் நவம்பர் 17-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்‌ தயாரித்த இந்த திரைப்படத்திற்கு ‘ஹிருதயம்’ மற்றும் ‘குஷி’ புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

மலையாள நடிகர் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார். திரில்லர் ஜானரிலான படைப்புகளை விரும்பி ரசிக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தத் திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.

எதிர்பாராத திருப்பங்களையும் சுவாராசியமான முடிச்சுகளையும் கொண்ட இந்த சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படம். நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயான போராட்டத்தை கான்செப்டாக கொண்டது.

அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கக்கூடிய இந்த திரில்லரை அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடி வசதியாக குடும்பத்துடன் கண்டு ரசிக்க, அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.

Latest articles

திரைத்துறையினர் கூடிய பிரமாண்ட விழாவில் தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப...

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

More like this