HomeMovie Reviewபருந்து சினிமா விமர்சனம்

பருந்து சினிமா விமர்சனம்

Published on

சமூகத்துக்கும், உரிய வயதும் பக்குவமும் இல்லாமல் காதலிக்கிறவர்களுக்கும் கருத்து சொல்கிற படம்.

மதுரைப் பக்கமுள்ள ஒரு கிராமத்தில் ஒரு வசதியான குடும்பத்தின் கல்லூரிப் பருவத்தைக் கூட தொடாத பெண், அவள் தனது குடும்ப அந்தஸ்துக்கு பொருந்தாத இளைஞனைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போகிறாள். அவளைத் தேடிப் பிடிக்க தாய் மாமன், ஊர்த் தலைவர், அவரது தம்பி, அவரது காதலி என பலரும் களமிறங்குகிறார்கள்.

கண்டுபிடித்தபின் என்ன செய்வது அவர்களின் நோக்கம்? கண்டுபிடித்தார்களா? என்பதெல்லாம்தான் பருந்தின் கதை…

ஊர்த் தலைவரின் மகனாக வருகிறவர் கிராமத்து ஹீரோ போலிருக்கிறார். வில்லன்களைப் போல் அடிதடியில் ஈடுபடுகிற நடிப்பு கச்சிதம். அவரது காதலியாக போலீஸ் அதிகாரியாக வருகிற ஷர்மிஸா மெல்லிய கவர்ச்சி காட்டி, கதைக்கேற்ப எளிமையாக நடித்துள்ளார்.

ஊர்த் தலைவராக வருபவர் அழகுமலை. இந்த படத்தை தயாரித்து இயக்கியிருப்பவர். காதலர்களை தேடுகிற விஷயத்தில் மிரட்டலான வில்லன் போல் நடந்து கொண்டாலும் கிளைமாக்ஸில் வித்தியாசமான ஒரு விஷயத்தைச் செய்து கவனம் பெறுகிறார்.

மன்சூர் அலிகான் தாய்மாமனாக கெத்து காட்ட, வழக்கறிஞராக இயக்குநர் பேரரசு அதிரடியாக அட்டனன்ஸ் போட, அப்புக்குட்டி, சென்றாயன் சிரித்து ரசிக்க உதவுகிறார்கள். ஓடிப்போன பெண்ணின் அப்பாவாக மாரிமுத்து உள்ளிட்ட மற்றவர்களின் பங்களிப்பு நேர்த்தி.

ஜேம்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் கவர்கிறது. பின்னணி இசையில் தேவைக்கதிக பில்டப் தெரிகிறது. காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு தரம்.

காதலர்களை தேடுகிறவர்கள், அவர்களை என்ன செய்வார்களோ ஏது செய்வார்களோ என ஆரம்பம் முதல் கடைசி வரை ஆடியன்ஸ் பரபரப்பாக இருக்கும்படி கதையை நகர்த்தி, அதில் காமெடியை அளவாக கலந்து, எதிர்பார்க்காதபடி கிளைமாக்ஸை தந்திருக்கும் இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்.

Rating 3 / 5

Latest articles

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது!

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம்...

‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.  

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை...

டாக்டர் ஐசரி கே கணேஷ் முன்னிலையில் தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் !

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் திரு.சி....

அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்ற ‘என்ன விலை’ திரைப்படம்!

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம் அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த...

More like this