HomeMovie Reviewடோண்ட் டிரபிள் தி டிரபிள் சினிமா விமர்சனம்

டோண்ட் டிரபிள் தி டிரபிள் சினிமா விமர்சனம்

Published on

கதைநாயகன் சூரிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வர 25 லட்சம் தேவை. அந்த தேவையை தன்னுடன் தொடர்பிலிருக்கிற சிறுமியின் மந்திர சக்தியால் நிறைவேற்றிக் கொள்ள முடிவெடுத்து அதற்கான முயற்சியில் இறங்குகிறார். பனம் கிடைத்ததா, பிரச்சனைகள் தீர்ந்ததா இல்லையா என்பது மீதிக் கதை…

சூரிக்கு என்ன பிரச்சனை, சிறுமிக்கு மந்திர சக்தி எப்படி வந்தது என்பதெல்லாம் இன்ட்ரெஸ்டிங்.

சுவாரஸ்யமான மோசடிகளில் ஈடுபடுகிற ஆம்புலன்ஸ் டிரைவர் சூரியாக ஃபகத் ஃபாசில் செய்கிற அலப்பரைகளும், சிறுமியிடமும் லோக்கல் தாதாவிடமும் மாட்டிக் கொண்டு தவிப்பதும் கலகலப்புக்கு கேரண்டி. எமோஷ்னல் காடசிகளிலும் ஸ்கோர் வாங்குகிறார்.

தனக்கிருக்கும் சிறிய மேஜிக்கல் பவரை வைத்து எதிராளிகளை ஓடஓட விரட்டுவது, அதே பவரை வைத்து தன் மீது அன்பு காட்டும் ஃபகத் ஃபாசில் ஆபத்திலிருந்து காப்பாற்றுவது என மனதைக் கொள்ளையடிக்கும் நடிப்பைத் தந்திருக்கிறார் சிறுமியாக வருகிற ஷாரா பாலேக்கர்.

வில்லன்களாக வருகிற மகேஷ் மஞ்ச்ரேக்கரிலிருந்து மற்ற நடிகர் நடிகைகள் தங்கள் கேரக்டர்களுக்கு நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார்கள்.

கால பைரவாவின் பின்னணி இசையும் பாடல்களும் கதையோட்டத்துக்கு எனர்ஜி தருகிறது.

ஹைதராபாத்தின் சாலைகள் முதல் சந்து பொந்துகள் வரை சுற்றிச் சுழன்று பேண்டஸி கதைக் களத்திற்கு ஏற்ற வண்ணங்களுடன் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.

கதை கொஞ்சம் புதிதாக இருக்க திரைக்கதையில் காமெடி, எமோஷ்னல் என கலந்துகட்டி, ஃபெர்பாமென்ஸில் தூள் கிளப்புகிறவர்களை நடிக்க வைத்திருப்பது படத்தின் பலம். வாரக் கடைசி பொழுதுபோக்குக்கு நல்ல சாய்ஸ்.

Rating 3 /5

Latest articles

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியீடு!

டாக்டர் டூமுக்கு எதிராக ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற...

பிரேம் குமார் – ஃபஹத் ஃபாசில் கூட்டணியின் ‘அசரீரி’ புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வருகிறது!  

‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து...

சரத்குமார் நடிப்பில், பெர்ஜெயா குழுமம்- ரேடான் மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் அதிரடி ஆக்ஷன் எண்டர்டெயினர் திரைப்படம் ‘டாக்ஸி.’

பெர்ஜெயா குழும நிறுவனங்களும் ரேடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டாக்ஸி’ திரைப்படத்தின் அறிமுக விழா...

முகேன் ராவ் நடிப்பில் மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘நிறம்’ நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது!

K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’. முகேன்...

More like this