HomeGeneralயோகி பாபு - சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

யோகி பாபு – சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

Published on

நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் கோல்டன் பாக்கியம் காமெடி சரவெடி படத்தில் இணைகின்றனர்.
நாகார்ஜுனா ரெட்டி – பவன் பாசம்செட்டி இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டு பேனர்களின் முதல் தயாரிப்பு முயற்சியாக இந்தப் படம் அமைகிறது. படக்குழு இன்று டைட்டில் வெளியீட்டு கிளிம்ப்ஸை வெளியிட்டது. இந்தப் படம் முற்றிலும் தனித்துவமான கருத்துருவை தாங்கி வருகிறது.
இது வழக்கமான தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் அல்ல, மாறாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளையும், இரண்டு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களையும் ஒன்றிணைக்கும் ‘ Telumil ’ படைப்பு.
கிளிம்ப்ஸ் ஒரு நகைச்சுவையான குறிப்புடன் தொடங்குகிறது, அதில் ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். தெலுங்கு கதாபாத்திரம் கூல் ட்ரிங்குடன் பிரியாணியை ரசிக்கிறது, அதே நேரத்தில் தமிழ் கதாபாத்திரம் சாம்பாருடன் இட்லியை ரசிக்கிறது.
எந்த உணவு சிறந்தது என இரண்டு கதாபாத்திரங்களும் வாக்குவாதத்துக்குள் செல்ல, இன்னொரு நபர் குறுக்கிட்டு இருவர் ருசிப்பதைக் காட்டிலும், அதிசுவை  காம்பினேஷன் ஒன்று காத்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் போது காட்சியும், கொண்டாட்டமும் வேறு நிலைக்குச் செல்கிறது.
யோகி பாபு மற்றும் சத்யாவின் அறிமுகம் அதைத் தொடர்ந்து வருகிறது. இருவரும்  வெள்ளை நிற உடையில் தோன்றுகின்றனர். பின்னர் இயக்குநர் அவர்களின் கதையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை அளிக்கிறார். அது காதலுடன் க்ரைம் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை என்று வெளிப்படுத்துகிறார். அத்துடன், ‘கோல்டன் பாக்கியம்’ கிளிம்ப்ஸ் டைட்டில் வெளியீடு நிறைவடைகிறது .
இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு காமெடி நடிகர்களை ஒரு பைலிங்குவல் கிராஸ்ஓவர் என்டர்டெய்னருக்காக ஒன்றிணைத்து இயக்குநர் பவன் பாசம்செட்டி தனித்துவமான ஒன்றை முயற்சித்துள்ளார். கூடுதல் சுவாரஸ்யமாக, தெலுங்கு நடிகர் சத்யா தமிழ் பேசுவதையும், தமிழ் நட்சத்திரம் யோகி பாபு தெலுங்கு பேசுவதையும் காண முடிகிறது. கிளிம்ப்ஸில், காட்சிகளின் பின்னணியில் பிரம்மாண்டமான மல்டி-ஸ்டாரர் கட்அவுட்களுடன், அவர்களை ஒரு மிகப்பெரிய தெலுங்கு – தமிழ் காம்பினேஷனாக முன்னிறுத்துகிறது.
கிளிம்ப்ஸைப் பார்க்கும்போது, படம் முன்னணி நடிகர்களின் தனித்துவமான கெமிஸ்ட்ரியை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான என்டர்டெய்னராக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
யோகி பாபு  மற்றும்  சத்யா  இருவரும் படத்தின் மிகப்பெரிய நகைச்சுவை பலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் தனித்துவமான காமெடி ஸ்டைல் மற்றும் அபாரமான டைமிங் முதல் முறையாக இந்த படத்தில் ஒன்றிணைகிறது.
ஜெயஸ்ரீ (Jayashree) மற்றும் அதிராஜ் (Athiraj) கதாநாயகிகளாக நடிக்க, வென்னேல கிஷோர் (Vennela Kishore), சுதர்சன் (Sudharshan), கிஷோர் திருமலா(Kishore Tirumala), ரோகிணி(Rohini), தனிகெள்ளா பரணி (Tanikella Bharani) மற்றும் சுனில் ரெட்டி (Sunil Reddy)  ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் திறமையான தொழில்நுட்பக் குழுவும் இடம் பெற்றுள்ளது. மலையாள சினிமா ஒளிப்பதிவாளர் பப்லு அஜு (Bablu Aju)  ஒளிப்பதிவை கையாள, பவன் CH (Pawan CH) இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சிவா காமேஷ் D (Siva Kamesh D) கவனிக்க, எடிட்டிங்கை ரவி தேஜா கிரிஜாலா (Ravi Teja Girijala) மேற்பார்வையிடுகிறார்.
அறிவிப்புக்கு மற்றொரு நகைச்சுவைத் தொடுதலைச் சேர்க்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் படத்தை சங்கராந்தி வெளியீடாக அறிவித்து, பின்னர் சங்கராந்தியை அடித்துவிட்டு, இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

Latest articles

அதிரடியான ஆக்ஷன் நாயகனாக மணிகண்டன் நடிக்கும் காவலன் டிசம்பரில் ரிலீஸ்!

https://www.youtube.com/watch?v=ZiqE0OfHlxM   பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) - நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்...

‘ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி!

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என...

உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பிரமாண்ட கட்டடம்… மாயா பஜார் ஹப் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ள தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம்!

தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை...

இயக்குநர் பா.ரஞ்சித் பார்த்து பாராட்டிய ‘யானைமரம்’ படத்தின் டிரெய்லர்!

ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள 'யானைமரம்' படத்தின் டிரைலரை பார்த்துப் பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை...

More like this

அதிரடியான ஆக்ஷன் நாயகனாக மணிகண்டன் நடிக்கும் காவலன் டிசம்பரில் ரிலீஸ்!

https://www.youtube.com/watch?v=ZiqE0OfHlxM   பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) - நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்...

‘ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி!

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என...

உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பிரமாண்ட கட்டடம்… மாயா பஜார் ஹப் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ள தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம்!

தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை...