HomeGeneralஉறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பிரமாண்ட கட்டடம்... மாயா பஜார் ஹப் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும்...

உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பிரமாண்ட கட்டடம்… மாயா பஜார் ஹப் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ள தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம்!

Published on

தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து…

தமிழ்த் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக இன்றைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்து மாயாபஜார் ஹப்  என்ற நிறுவனத்தை அணுகி அதற்கான  ஒப்பந்தத்தை செய்துள்ளனர்.
தனது பல ஆண்டுகால அனுபவத்தை முன்னிறுத்தி சென்னை திரை இசை சங்கம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான  இடத்தில்  மாபெரும்  வணிக வளாகம் அமைத்து, அதில்
திரையுலக பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்க முடிவெடுத்தனர்.
இந்த பத்து மாடி கட்டிடத்தை கட்ட திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம்  சார்பில் மாபெரும் இசை நிகழ்ச்சிகள் சென்னை ஹைதராபாத் குஜராத் சிங்கப்பூர் மற்றும் துபாய் நகரங்களில் நடத்தி, அதில் வரும் வருமானத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இந்தத் திட்டத்திற்கு அனைத்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களும் ஒன்றிணைந்து தங்கள் சங்கத்திற்காக இலவசமாக இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி தர முன்வந்துள்ளனர்.
இம்மாபெரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. அதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் அனுமதி பெற திரை இசை சங்கத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த மாபெரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடக்க தமிழ்த்திரை இசை சங்கம் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் வாயிலாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
இதை பத்திரிகை நண்பர்கள் தமிழக அரசிடம் கொண்டு சேர்க்குமாறு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

Latest articles

அதிரடியான ஆக்ஷன் நாயகனாக மணிகண்டன் நடிக்கும் காவலன் டிசம்பரில் ரிலீஸ்!

https://www.youtube.com/watch?v=ZiqE0OfHlxM   பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) - நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்...

‘ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி!

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என...

இயக்குநர் பா.ரஞ்சித் பார்த்து பாராட்டிய ‘யானைமரம்’ படத்தின் டிரெய்லர்!

ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள 'யானைமரம்' படத்தின் டிரைலரை பார்த்துப் பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை...

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

https://www.youtube.com/watch?v=QTLiVG2ln-k சுயாதீன இசை கலைஞர்களின் முயற்சியில் மியூசிக் வீடியோ ஆல்பங்கள் வெளியாகி இசை ரசிகர்களின் பாராட்டை பெறுவதுடன் மில்லியன் கணக்கிலான...

More like this