சராசரி மனிதனாக இருந்தவன் தனக்குள் பாலின மாறுபாட்டை உணர்ந்து மாறும்போது குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்படுவது, சமூகம் தருகிற அவமானங்களால் மன உளைச்சலுக்கு ஆளாவது என படாத பாடு பட வேண்டியிருக்கும். அதையெல்லாம் நேரிலும் திரையிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதை சம்பவங்களை நட்பை அடிப்படையாக வைத்து, தனது வழக்கமான வித்தியாசமான திரைமொழியில் காண்பிக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

