HomeMovie Reviewதி பாரடைஸ் சினிமா விமர்சனம்

தி பாரடைஸ் சினிமா விமர்சனம்

Published on

சாமானியன் போராளியானால் சம்பவங்கள் ‘தெறி’யாகத்தான் இருக்கும். இந்த பாரடைஸில் தெறிக்கிற ரத்தம் அளவுக்கதிகம்.
குடியுரிமையில்லாமல், மாலிக் என்பவரின் சர்வாதிகாரத்துக்கு கட்டுப்பட்டு வாழ்கிற பழங்குடி மக்களின் உரிமைக்காக சம்மக்கா என்பவர் போராடுகிறார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் போராட்டக் களத்துக்கு வருகிறார். மாலிக்கையும் அவனுக்கு பலமாக இருக்கிற பலரையும் வேட்டையாடும் முயற்சியை தீவிரப்படுத்துகிறார். அதன் விளைவுகள் மீதிக் கதை… மக்களுக்கு குடியுரிமை கிடைத்ததா இல்லையா என்பது நிறைவுக் காட்சி… இயக்கம் ஸ்ரீகாந்த் ஒடேலா
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி முழுக்க முழுக்க மாஸான ‘ரக்கட்’ லுக்கில், இரட்டை ஜடையுடன் எதிரிகளை கொன்று குவிக்கும் எபிசோடுகளில் ரத்த ஆறு ஓடுகிறது. வன்முறை வெறியாட்டத்துக்கேற்ற நானியின் உடல்மொழி மிரட்டுகிறது.
நானிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருகிற கயாது லோகர் கவர்ச்சி காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், கவனம் பெறும் விதமான நடிப்பையும் தந்திருக்கிறார்.
சம்மக்காவாக சோனாலி குல்கர்னி துணிச்சலான போராளியாக தனித்து தெரிய, மோகன் பாபு மாலிக்காக கெத்து காட்ட அவரது மகனாக வருகிற ராகவ் ஜூயல் உள்ளிட்ட மற்றவர்களுக்கு மக்களை கொடுமை செய்து சுகம் கண்டு, அதற்கான பலனை அனுபவிக்கிற வேலை. அதை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் நானியுடன் ஆடும் ஆட்டம் அட்டகாசம்.
வெட்டுக்குத்து, துப்பாக்கிச் சூடு என மிரள வைக்கும் ரத்தச்சகதியான கதையோட்டத்துக்கு பொருந்துகிற அளவில் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் அனிருத்.
1980 காலகட்டத்தை, கே ஜி எஃப் படத்தில் பார்த்து போன்ற கரடு முரடான கருமை படர்ந்த கதை நிகழ்விடங்களை ராவாக பதிவு செய்த நேர்த்திக்காக சி.எச். சாயின் ஒளிப்பதிவுக்கும் கலை இயக்குநரின் பங்களிப்புக்கும் தனி பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
மேக்கிங் என்று பார்த்தால் நிச்சயம் வேற லெவல்தான். அதை மறுக்க முடியாது. படம் அதிகப்படியான வன்முறைப் படங்களை விரும்புகிற கூட்டத்திற்கு திருப்தி தரலாம். மற்றவர்களுக்கு மற்றுமொரு ‘டாக்ஸிக்’ அனுபவமே கிடைக்கும்.
Rating 2.5

Latest articles

தமிழ் சினிமாவில் என்னுடைய கம்பேக் படம் இது! -ஏழு கடல் ஏழு மலை படத்தின் பிரமாண்ட பிரி ரிலிஸ் நிகழ்வில் நடிகர் நிவின் பாலி உற்சாகம்

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதையொட்டி...

வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’ – 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

https://www.youtube.com/watch?v=AYLWPzco89I பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்-ன் சமீபத்திய இசை வெளியீடான ‘அன்னக்கிளி’, வாகீசன் ராசையாவின் முதல் ஆல்பமான _தமிழ் கிறுக்கனின் முதல்...

கைகளில் பயங்காட்டும் ரத்தம்… லவ் & வார் படத்தின் போஸ்டர்களில் கவனம் ஈர்க்கும் ரன்பீர் கபூர்!

சஞ்சய் லீலா பன்சாலி விவரித்திருக்கும் பிரம்மாண்டமான லவ் & வார் திரைப்படத்திற்கான உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ரன்பீர் கபூரின்...

கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் ‘வயலெட் கனவு’ ரிலீஸுக்கு தயாராகிறது!

பிரபல கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில், திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர்...

More like this