HomeGeneralஅர்ஜித் சங்கர் - க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

Published on

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜீவன் தற்போது பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அசோக் குமார் இயக்கும் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்துள்ளார்.
‘காக்க காக்க’ திரைப்படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வழக்கமான கதைக்களங்களைத் தாண்டி வித்தியாசமான கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்து ஹீரோவாகவும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் ஜீவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். அசோக் குமார் இயக்கத்தில், அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் ஜீவன் தற்போது இணைந்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘லவ்வர் பாய்’ படப்பிடிப்பில் ஜீவன் இணைந்துள்ளதை அறிமுகப்படுத்தும் வகையில், ஸ்டைலிஷான காட்சிகளுடன் கூடிய ஒரு சிறப்பு புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜீவனின் வசீகரிக்கும் திரையிருப்பு மற்றும் நடிப்பை ரசித்து பார்த்த ரசிகர்களுக்கு அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் புதிய தலைமுறை திறமையாளர்களுடன் ஜீவன் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், அவரது கதாபாத்திரம் குறித்தும் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.
அறிமுக நடிகர் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அசோக் இயக்குகிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோ சார்பில் சுதன் சுந்தரம் இப்படத்தை தயாரிக்கிறார். படம் குறித்த மேலதிக விவரங்களை வரும் நாட்களில் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு

https://www.youtube.com/watch?v=0LenE_VyLl0 ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 7 எபிசோடுகள் கொண்ட Tamil Zee 5 Original தொடரில் அஷ்வின், அர்ச்சனா,...

More like this