வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் ‘மறுஜென்ம காதல்’ திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச்செல்வன், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கூல் சுரேஷ், முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா, இயக்குநர் இ வி கணேஷ்பாபு மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
பாவிக்கும், ஆவிக்கும் நடக்கும் சண்டையை மையக்கருவாக கொண்டு, உண்மையான காதல் எத்தனை ஜென்மங்கள் எடுத்தும் சேரும் என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக உருவாகும் படத்தில் கதாநாயகியாக வித்யாதாரி நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக கூல் சுரேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்ஷராய் விஜய் நடிக்கிறார். அவர்களுடன் இமான் அண்ணாச்சி, முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி வந்தை பிரேம் இயக்குகிறார். கிரியேட்டிவ் இயக்குநர் K.S.விஜயபாலன், ஒளிப்பதிவு வி.சத்யகண்ணன், இசை சார்லஸ் தனா, எடிட்டிங் லெனின், நடனம் ஜோசப் கென்னடி, சண்டைப் பயிற்சி கிளாசிக் பாபு, கலை ராஜா கண்ணதாசன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு நிர்வாகம் கே.ராமலிங்கம், தயாரிப்பு வித்யா பிரேம்.

