HomeGeneral ஜாதி சார்ந்த கட்டுப்பாடு சமூகத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும்...

 ஜாதி சார்ந்த கட்டுப்பாடு சமூகத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் இது! – ‘பனங்காட்டான்’ குறித்து இயக்குநர் வீரமுருகன்  

Published on

மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும்  பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை உள்ளிட்ட படங்களை இயக்கிய வீரமுருகன் இயக்கியுள்ள படம் ‘பனங்காட்டான்.’ இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் ராஜன், மாஸ்டர் ரோஹித்,செம்பட்டி கருப்பையா, திருச்சி சுரேஷ் குமார் ஆகியோர் முக்கி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தர். N இசையமைத்துள்ளார். ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை பன்னீர்செல்வம் மேற்கொண்டுள்ளார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள வீரமுருகன் படம் பற்றி பகிர்ந்தவை…
தென் மாவட்டத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளேன்.
ஒரு முக்கிய பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஊர் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு வைத்து, அதை மீறி யாரும் உள்ளே வரக்கூடாது, வெளியே போக கூடாது என்று இன்று வரை மறைமுகமாக அதனை கடைபிடித்து வருகின்றனர். அது என்ன மாதிரியான கட்டுப்பாடு, அது சமூகத்தில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது,என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் இது. பாலமேடு ,தூத்துக்குடி, ராமநாடு, மூணாறு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம்,  விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிடவிருக்கிறோம்.

Latest articles

அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்! -இயக்குநர் பேரரசு கோரிக்கை

பேருந்து கட்டணங்கள் விமான டிக்கெட் அளவுக்கு இருக்கு... அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை அரசு, தனியார் பேருந்துகளுக்கு நிர்ணயிக்க வேண்டும்! தீபாவளி,...

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உற்சாகமாக நடைபெற்ற ‘இராவணன் சோலையில் சிவன் மலை’ படத்தின் பூஜை! இசைஞானி இளையராஜா குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் படம் 'இராவணன்...

நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி’ டீஸர் வெளியீடு! 

https://www.youtube.com/watch?v=UUfAemccAJ0 தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ்...

‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் – பிருத்விராஜ் சுகுமாரன் கூட்டணி!

தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாய்ரா’ திரைப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும்...

More like this