HomeMovie Review'ஒன்ஸ் மோர்' சினிமா விமர்சனம்

‘ஒன்ஸ் மோர்’ சினிமா விமர்சனம்

Published on

தன்னை உயிருக்குயிராக காதலித்தவள் தன்னை ஏன் பிரிந்தாள் என்பது புரியாமல் எட்டு வருட காலமாக வேதனையில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான் இளைஞன் ரகு. ரகுவை துரத்தித் துரத்திக் காதலிக்கிறாள் அஞ்சலி.

ஒரு கட்டம் வரை அஞ்சலியிடம் சற்றே வெறுப்பாக நடந்து கொள்ளும் ரகு, பின்னர் அஞ்சலியின் பிரியத்தை தாங்க முடியாமல் காதல் வசப்படுகிறான். காதல் கல்யாணத்தை நோக்கி நகர்கிறது; நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது. அந்த நேரமாகப் பார்த்து, ரகுவுக்கு முன்னாள் காதலி தன்னை ஏன் பிரிந்தாள் என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கிறது.

அந்த பதில், ரகு – அஞ்சலிக்கிடையில் உருவாக்கும் சிக்கல்களும் தீர்வுகளுமாக பயணித்து முடிகிறது அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியிருக்கும் ‘ஒன்ஸ் மோர்.’

ரகுவாக, இதுவரை பார்க்காத மென்மையான காதல் நாயகனாக அர்ஜுன்தாஸ். பழைய காதலின் வலியையும், புதிய காதல் தருகிற உற்சாகத்தையும், பழைய காதலியை மீண்டும் சந்தித்தபின் உருவாகிற குழப்பத்தையும் சரியான முகபாவங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அஞ்சலியாக அதிதி ஷங்கர். வழக்கமான கியூட்னஸ், துள்ளல் என வலம் வந்து, எமோஷனல் காட்சிகளில் போதுமான நடிப்பைத் தருகிறார்.

அர்ஜுன் தாஸின் கல்லூரிக் கால காதலியாக, காதல் விஷயத்தில் பைத்தியக்காரத்தனமாக முடிவெடுக்கிற கேரக்டரில் சோனா ஒலிக்கல். நடிப்புப் பங்களிப்பில் குறையில்லை.

ஹேசம் அப்துல் வஹாபின் இசையில் படம் முழுக்க ஏகப்பட்ட பாடல்கள். கண்ணம்மா பாடல் பட வெளியீட்டுக்கு முன்பே தாறுமாறாய் ஹிட்டடித்துவிட, மற்ற பாடல்கள் இதம் தந்து கடக்கின்றன. அதிரடி ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மெல்ல மெல்ல நகரும் காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்டுகிறது பின்னணி இசை.

அழகழகான ஃபிரேம்களில் காட்சிகளை வளைத்துச் சுருட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன்.

கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஹீரோ என்ன முடிவெடுப்பார் என்ற பதற்றம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை. அதைத்தாண்டி பழக்கப்பட்ட இந்த கதையில் ஸ்பெஷலாக சொல்ல ஏதுமில்லை.

Rating 3 / 5

Latest articles

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=bfrZLRxsink மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று...

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ்...

‘மீசைய முறுக்கு 2’ படத்திலிருந்து ‘கலைவாணியே’ 5வது சிங்கிள் வெளியீடு 

https://www.youtube.com/watch?v=-9ipZSzGZf0 ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம், நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள்...

நாகார்ஜுனா நடிப்பில் ர.கார்த்திக் இயக்கிய ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=OgF4eRYcHd8 'நித்தம் ஒரு வானம்', 'மேட் இன் கொரியா' ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில்...

More like this