ஒரு தந்தைக்கும் அவரது சிறு வயது மகளுக்கு இடையேயான ஆழமான பாசப் பிணைப்பு படத்தின் அடித்தளம்.
நாயகன் ரவிதேஜா ஊரில் அநியாய அக்கிரமங்கள் நடந்தால் தட்டிக் கேட்காமல் விடமாட்டார். காமவெறியர்களின் அராஜகம் அதிகமுள்ள அந்த ஊரில் பள்ளிப் படிப்பைத் தொடர்கிற மாணவிகள் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். அதற்கு காரணமானவர்கள் யார், அவரை ரவிதேஜா என்ன செய்கிறார், என்னவிதமான பாதிப்புக்கு ஆளாகிறார் என்பது கதை…
ஐயப்ப பக்தராக மாலை போட்டு விரதமிருக்கும் போது அமைதியான மனிதராகவும் அக்கிரமக் காரர்களை அடித்துத் துவைக்குபோது அதிரடியாகவும் செயல்பட்டிருக்கிறார் ரவி தேஜா. அவருக்கும் மகளாக வருகிற சிறுமிக்குமிடையிலான தந்தை – மகள் இடையேயான பாசப்பிணைப்புக் காட்சிகள் மனதைத் தொடும்.
ரவி தேஜாவின் மனைவியாக பிரியா பவானி சங்கரின் பங்களிப்பு கச்சிதம். மகளாக சிறுமி நட்சத்திரா துறுதுறு நடிப்பால் கவர்கிறார்.
காமெவெறியர்களாக வருகிறவர்கள், காமவெறியனுக்கு பள்ளிக்கூட சிறுமிகளை சப்ளை செய்பவராக ஸ்வாசிகா, ஐயப்ப குருசாமியாக சாய்குமார் என பலரது நடிப்பும் நேர்த்தி. மற்ற கதாபாத்திரங்களும் கதைக்குத் தேவையான பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
சுவாமி ஐய்யப்பன் சார்ந்த பாடல்கள் அதிர்வலையைத் தூண்ட, பின்னணி இசையில் கதைக்கு தேவையான அதிரடி இருக்கிறது. விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு படத்தின் பலம்.
பரபரப்பான கிரைம் திரில்லரில் ஆன்மிகத்தை கலந்து படத்தை பக்கா கமர்சியல் படைப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா நிர்வானா. விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படங்களை விரும்புகிறவர்களுக்கு நல்ல சாய்ஸ்.
Rating 3 / 5

