HomeGeneralபோட்டோகிராபர் சினிமா விமர்சனம்

போட்டோகிராபர் சினிமா விமர்சனம்

Published on

உள்ளே போன யாரும் உயிருடன் திரும்பியதில்லை. அப்படியொரு காட்டுப் பகுதிக்கு வைல்டு லைஃப் போட்டோகிராபரான வீரா சில அரிய வகை உயிரினங்களைப் படம் பிடிப்பதற்காக போகிறார். இன்னொரு முக்கியமான தேடலும் இருக்கிறது. போனவர் எந்த திசையிலிருந்து வந்தோம், எப்படி வெளியில் போவது என புரியாமல் குழம்பித் தவிக்கிறார். நாள் கணக்கில் பட்டினியாக காட்டில் சுற்றி உடல் நிலை பாதிக்கப்படுகிறார். தன்னைச் சுற்றி நடக்கும் மர்மமான விஷயங்களைக் கண்டு மிரள்கிறார்.

அப்படி அந்த காட்டுக்குள் என்னதான் இருக்கிறது? வீரா உயிருடன் திரும்ப முடிந்ததா இல்லையா?

இந்த கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதையில் பதில் சொல்லியிருக்கும் இயக்குநர் அஷ்ரப், கதைநாயகன் வீராவாக பயம் பதட்டம் அதிர்ச்சி துணிச்சல் என கதாபாத்திரத்துக்கு உணர்வுகளுடன் துடிப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.

நாயகி ஜனனி சமாதானம் லட்சணமாக இருக்கிறார். நடிப்பு அளவாக உள்ளது. நிழல்கள் ரவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி, தேவி மகேஷ் உள்ளிட்டோரின் நடிப்பு கதைக்கேற்றதாக இருக்கிறது.

அமானுஷ்யம், திகில் என சுற்றிச் சுழலும் காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்டுகிறது ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை. காடு இருட்டு என பரவிப் பாய்ந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் ரயீஸ் அஹமதின் கேமரா.

இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை எதிர்பார்ப்பவர்களை திருப்திபடுத்துவது சந்தேகம்தான் என்றாலும் திகிலும் திரில்லுமாய் பயணிக்கும் படங்களை விரும்புவோருக்கு நிச்சயம் பிடிக்கும்.

Rating 3 / 5

Latest articles

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு 

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா...

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர்...

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல...

More like this