HomeGeneralஉண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப்...

உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

Published on

திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்!
தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில், நட்புகள்கூட வெறும் நினைவுகளாக மட்டுமே மாறிவிடுகின்றன.
ஆனால், சிலர் மட்டும் உண்மையான வெற்றி என்பது உச்சத்தை அடைவது மட்டுமல்ல, தங்களுடன் பயணித்தவர்களையும் அந்த உயரத்திற்குக் கொண்டு செல்வதுதான் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் அல்லு அர்ஜுன்.
சில மாதங்களுக்கு முன்பு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘AA23’ திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது, அந்தப் படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், அதன் பின்னணியில் இருந்த ஒரு விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, அல்லு அர்ஜுனின் நெருங்கிய நான்கு நண்பர்களும் அந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இது வெறும் தயாரிப்பாளர் பட்டியல் அல்ல. இது நட்புக்கு அவர் அளித்த மரியாதையாகும்.
அவர்களில் ஒருவரான பன்னி வாஸ், அல்லு அர்ஜுனின் வாழ்க்கையிலும் திரைப்பயணத்திலும் பல கட்டங்களாக அவருடன் இணைந்து பயணித்தவர். மேலும், பள்ளி நாட்களில் இருந்தே நண்பர்களாக இருக்கும் சந்தீப் ராமினேனி மற்றும் நட்ராஜ் ஆகியோரும் இந்தத் படத்தில் இணைந்துள்ளனர். அல்லு அர்ஜுனின் உறவினரும் சிறுவயது தோழியுமான ஸ்வாதியும் இதில் இணைந்துள்ளார்.
இந்த உறவுகள் அனைத்தும் அல்லு அர்ஜூன் புகழுக்கும், சாதனைகளுக்கும், இந்தியா முழுவதும் கிடைத்த அங்கீகாரத்திற்கும் முன்பே உருவானவை.
வெற்றி பலரையும் விலக்கி வைக்கும் இந்தத் திரையுலகில், அல்லு அர்ஜுன் மட்டும் தனது வெற்றியின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்.
‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பிலும், அவரது தாய்வழி உறவினர்களுக்குச் சொந்தமான முத்தம்செட்டி மீடியா நிறுவனம் பங்கேற்றிருந்தது. அவர் உயரும்போது, தன்னுடன் இருந்தவர்களையும் முன்னேற்றுவதை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
இதுதான் நண்பர்கள் தின கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தம். நட்பு என்பது பழைய நினைவுகளைக் கொண்டாடுவது மட்டுமல்ல. புதிய சாதனைகளை ஒன்றாக உருவாக்குவதும்தான். உலகமே நம்மை நம்புவதற்கு முன்பே நம்மை நம்பியவர்கள்மீது நம்பிக்கை வைப்பதுதான் உண்மையான நட்பு.
கோடிக்கணக்கான ரசிகர்கள் அல்லு அர்ஜுனை ஒரு சிறந்த நடிகராகவும் பொழுதுபோக்கு கலைஞராகவும் நேசிக்கிறார்கள்.
ஆனால், இதுபோன்ற சம்பவங்கள்தான் அவரது இன்னொரு பக்கத்தையும் வெளிக்காட்டுகின்றன.சாதனைகளுக்கு இணையாக உறவுகளையும், புகழுக்கு இணையாக நட்பையும் மதிக்கும் மனிதராக அவரை உயர்த்தியுள்ளன.
ஒரு திரைப்படம் சாதனைகளை உருவாக்கலாம். ஆனால், நட்புதான் வரலாற்றை உருவாக்குகிறது.

Latest articles

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...

மாடர்ன் கல்யாணத்தின் ‘அட்ராசிட்டி’களை நகைச்சுவையாக காட்சிப்படுத்திய ‘பியார் பிரேமா கல்யாணம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் சமூக வலைதளங்களில் வைரல்!

https://www.youtube.com/watch?v=3joIUDlLRgk இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’...

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

More like this

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...

மாடர்ன் கல்யாணத்தின் ‘அட்ராசிட்டி’களை நகைச்சுவையாக காட்சிப்படுத்திய ‘பியார் பிரேமா கல்யாணம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் சமூக வலைதளங்களில் வைரல்!

https://www.youtube.com/watch?v=3joIUDlLRgk இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’...