HomeCinemaவிக்ராந்த், யோகிபாபு நடிக்கும் படத்தின் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு! பிரமாண்ட செட்டில்...

விக்ராந்த், யோகிபாபு நடிக்கும் படத்தின் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு! பிரமாண்ட செட்டில் படப்பிடிப்பு தொடங்கியது.

Published on

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையேற்க விக்ராந்த், யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

நிகழ்வில் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் தாய் சரவணன், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

வித்தியாசமான திரைக்கதையில் ‘தா’, ‘வில் அம்பு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தையும் புதுமையான களத்தில் பரபரப்பான சைக்கலாஜிகல் திரில்லராக இயக்கி, தயாரிக்கிறார்.

இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடிக்க இனிகோ பிராபகர், மிப்புசாமி, குமார் நடராஜன் உள்ளிட்டோருடன் இன்னும்பல பிரபல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

ஏவி.எம் அரங்கில் பெரும் பொருட்செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

பீச்சாங்கை, கஜினிகாந்த், டிராபிக் ராமசாமி உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பால முரளி பாலு இசையமைக்கிறார்.

கேகே ஒளிப்பதிவு செய்ய, வழக்கு எண், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்கிறார்.

கலை இயக்குநராக ஜெய சந்திரன், ஸ்டண்ட் இயக்குநராக ஃபயர் கார்த்திக் பணியாற்றுகின்றனர். தஸ்தா நடனம் அமைக்கிறார். மக்கள் தொடர்பை மணவை புவன் கவனிக்கிறார்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this