HomeGeneralஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

Published on

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன் கருப்பட்டி’யாக நடித்துள்ளார் பொழிச்சை சி. ராஜ்குமார்.
கொளத்தூர் என்ற கிராமத்தில் கருப்பட்டி என்ற பார்த்திபன் தாயுடன் வசித்து வருகிறான். அதே கிராமத்தில் தந்தையுடன் வசித்து வரும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி அவளையே திருமணம் செய்து கொள்கிறான்.
திருமணம் முடித்த சில நாட்களில் பவானி மர்மமான முறையில் இறக்கிறாள். அதன் பிறகு பவானி ஆவியாக மாறி அனைவரையும் மிரட்டுகிறாள். இதை அறிந்து கொண்ட கருப்பட்டி அவளை கொலை செய்தது யார்? எப்படி அவள் இறந்தாள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான்.  அப்போது அவன் பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்மமாகவும் திகிலாகவும் அனைவரையும் மிரட்டுவதாகவும் இருக்கிறது. இப்படி ஒரு கதைக்களத்தில் ஆக்சன் திரில்லராக உருவாகி வருகிறது.
பிரதான கதாபாத்திரத்தில் விஜயராஜ் நடிக்க சமந்து, ஹரிணி தா, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கிளி ராமச்சந்திரன், சித்திரகுப்தன், ரமேஷ், கலைவாணி, ரஷீத் சத்யராஜ், செண்பகவள்ளி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
காதல்பதிவு, நந்திவரம், சினிமா கனவுகள், கொலை தூரம் படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம் கருப்பட்டி படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது ஐந்தாவது படமாக இயக்கி வருகிறார்.
சேலம் மேட்டூர் மற்றும் செஞ்சி அதனை சுற்றியுள்ள இடங்களில் செந்தில் மாறன்- கவிநாதன் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனித்துள்ளனர். இசையமைத்து எடிட்டிங்கையும் டி. எஸ். திவாகர் கவனிக்க ஹிஜாஸ் அகமது பாடல்களை எழுதியுள்ளார். ராம் முருகேஷ் நடனப் பயிற்சியையும், ரமேஷ் சண்டை பயிற்சியையும், மக்கள் தொடர்பு பணியை என் விஜயமுரளியும் கவனித்துள்ளனர்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

More like this