கிஷோர், யோகிபாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர்.
‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார்.
மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’, தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு (Sound Design), பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐ உள்ளிட்ட இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளது.
படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், புதிய போஸ்டர்கள் மற்றும் விளம்பரப் பொருட்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

