HomeMovie Reviewஅருள்வான் சினிமா விமர்சனம்

அருள்வான் சினிமா விமர்சனம்

Published on

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி குறிஞ்சிக்கு தம் இனம் அப்படி இருப்பது தவறு என உணர்த்துகிறது அவளது தாத்தாவின் மரணம்.

படிப்பின் அவசியத்தை உணரும்போது பூப்பெய்துகிறாள். உடனடியாக அவர்களின் பாரம்பரிய நடைமுறைப்படி கல்யாணத்துக்கு ஏற்பாடாகிறது. அதையெல்லாம் கடந்து படிப்பதற்கான முயற்சியில் மலையிலிருந்து இறங்குகிறாள். கலெக்டரை சந்தித்தால் தான் எதிர்பார்க்கும் படிப்பு கிடைத்துவிடும், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பள்ளிக்கூடம் வந்துவிடும் என்று நம்புகிறாள். அந்த நம்பிக்கை நிறைவேறியதா இல்லையா என்பது மீதிக் கதை…

குறிஞ்சியாக கிருத்திகா. கவலை, வலி, சோகம், துக்கம், பயம், பதற்றம், எதிர்பார்ப்பு, முகமலர்ச்சி என எல்லாவித உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டிய கனமான பாத்திரம். அதற்கு உயிரூட்டியிருக்கிறது அந்த சிறுமியின் நடிப்பு.

சிறுமி நினைத்தபடி படிப்பதற்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் கடமையாற்ற முடியுமோ அப்படியெல்லாம் கடமையாற்றுகிற கலெக்டராக அருள்நிதி. ஒரு கட்டத்தில் பதவியை விட்டு விலகி அடுத்த கட்டமாக மலையில் ஏறும்போது கேரக்டரின் மதிப்பும் ஏறுகிறது.

கிருத்திகாவின் அப்பாவாக ஆரவ், அடக்குமுறைக்கு ஆளாகி அனுபவிக்கும் வேதனைகளைப் பிரதிபலிப்பதில், அடக்குமுறைக்கு எதிராக சீறி பாய்வதில் கவனிக்க வைக்கிறார். கிருத்திகாவின் அம்மாவாக ரம்யா பாண்டியன், மலைவாழ் மக்களின் நலனின் அக்கறை கொண்டவராக காளி வெங்கட், கலெக்டரின் பி ஏ’வாக விடிவி கணேஷ், காவல்துறை அதிகாரியாக கவிதா பாரதி என நன்றாக நடிப்பவர்களை பார்க்க முடிகிறது.

காட்டிலாக்கா அதிகாரியாக ஜான் விஜய். கொடூரமானவராக நடிப்பது அவருக்கு பழகிப்போன விஷயம். அதை ரிப்பீட் செய்திருக்கிறார்.

ஜி வி பிரகாஷ் இசையில் ‘வேல் செவ்வேல்’ பாடலில் உற்சாகம் தெறிக்க, ‘அல்லிப் பூவே’ பாடல் இதம் தருகிறது. கதையின் உணர்வுகளுக்கு உத்வேகம் தருகிறது பின்னணி இசை. ஓங்கி உயர்ந்த மலை, அருவி, அடர்த்தியான காடு மேடுகளை பசுமை மாறாமல் படமாக்கி காட்சிகளை பிரமாண்டமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

மலைவாழ் மக்களுக்கு கல்வி கிடைப்பதில் இருக்கிற சிரமங்களை, அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை, நிலவும் அடக்குமுறையை எடுத்துக் காட்டி, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிற இயக்குநர் கணேஷ் விநாயகன் விமர்சகர்களின், ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையத் தயாராகலாம்.

Rating 3.5 / 5  

Latest articles

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி ஜானர் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள்...

பேண்டஸி காமெடி சப்ஜெக்டில் முனீஸ்காந்த் – பாலாஜி சக்திவேல் நடிக்கும் ‘ஜுமாக்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

முனீஸ்காந்த்- பாலாஜி சக்திவேல் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கும் பேண்டஸி படத்தின் போஸ்டரை விஜய் ஆண்டனி...

More like this