HomeGeneralமிக பிரமாண்டமாய் நடந்த மிஷ்கின் - விஜய் சேதுபதி கூட்டணியின் 'டிரெயின்' பட பாடல்கள் வெளியீட்டு...

மிக பிரமாண்டமாய் நடந்த மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியின் ‘டிரெயின்’ பட பாடல்கள் வெளியீட்டு விழா!

Published on

விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன் நடிக்க, மிஷ்கின் இயக்கியுள்ள ட்ரெயின் படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் மிகமிக பிரமாண்டமாக நடந்தது. இயக்குநர்கள் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய மிஷ்கின் பேசியபோது ”நந்தலாலா கதை சொல்லும் போது தானு சார் மீட் பண்ணினேன் ஆனா சார்க்கு கதை ஒண்ணுமே புரியல ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது பட் எங்களால் அப்பொழுது ஒன்னா சேர்ந்து படம் பண்ண முடியல அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அதற்கு பிறகு தான் தானு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன் அவன் விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார் விஜய் சேதுபதி என்கூட ரெண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி நான் அவருக்கு நோ சொல்லிட்டு அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு

என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன் இந்தப் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன் இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவாறு நான் நாசர் நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன் ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம் நான் பெருமைப்படுகிறேன் தானு சார்க்கும் ரொம்ப நன்றி உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன் சினிமா அப்படித்தான் இருக்கும் தானு சாருக்கு ரொம்ப நன்றி உங்க காலத் தொட்டு வணங்குகிறேன் இளையராஜா போன்று சுறுசுறுப்பான மனிதராக உங்களைப் பார்க்கிறேன் ரொம்ப நன்றி” என்றார்.

விஜய் சேதுபதி பேசியபோது ”இன்னைக்கு எங்களை வாழ்த்த வந்த அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி எனக்கு பேசறது நிறைய வார்த்தை இல்ல நான் ரொம்ப கவனிச்சுட்டு இருந்தா இது எல்லாமே எனக்கு கிடைத்த பெருமை இல்லை மிஷ்கின் சாருக்காக தான் நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி இந்த படம் எப்ப வரும்னு நாங்க காத்துட்டு இருந்தோம் தானு சார் ஆகஸ்டுல கொண்டு வரேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி

நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும்போது இவர் கிட்ட ஆடிஷன் போயிருக்கும் நான் ஹீரோ ஆனதுக்கப்புறம் ஒரு டைம் என்னை கூப்பிட்டாரு கொஞ்சம் சைக்கோ மாதிரி இருப்பார் நான் டேட் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன் சைக்கோ படம் பார்த்ததுக்கு அப்புறம் இவரை எனக்கு ரொம்ப புடிச்சுசு சைக்கோ படம் பார்த்து முடிச்சுட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன் எனக்கு ஒரு வாட்ச் கொடுத்தார் பிசாசு 2 படத்துல ரெண்டு நாள் வொர்க் பண்ணினேன்

அதுக்கு அப்புறம்தான் ட்ரெயின் மூவி நடிச்சேன் செட் கலகலனு இருக்கும் மிஷ்கின் சார் நல்லா நடிக்கிறவங்களுக்கும் நல்லா வேலை செய்றவங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது அதனால எல்லோரும் சந்தோஷமா வேலை செஞ்சாங்க இவரை சுத்தி இருக்குற எல்லாருக்கும் சந்தோஷமா வச்சு பாரு அறிவு அன்பு இரண்டையும் பகிர்ந்து கொள்வார்கள் இந்தப் படம் உங்களுக்கு திர்லரா இருக்கும் ஆனா எனக்கும் மிஷ்கின் சார்க்கு ரொம்ப ரொமான்டிக் ஐ லவ் யூ மிஷ்கின் சார் என் கூட நடிச்ச எல்லாருக்கும் ரொம்ப நன்றி” என்றார்.

படத்தில் நடித்துள்ள நடிகை ப்ரீதி கரன் பேசியபோது ”எல்லாருக்கும் வணக்கம் ட்ரெயின் படம் வெளியாக போகிறது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஹார்டுவேர் எல்லாம் விரைவில் திரையரங்கில் பார்ப்பீர்கள். என்ன தேர்ந்தெடுத்ததற்கு மிஷ்கின் சாரிக்கு நன்றி. எந்த இடையூறும் இல்லாமல் படத்தில் நடித்திருக்கிறேன் நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். விஜய் சேதுபதி எனக்கு மிகவும் பிடித்த நடிகர் யுகி சார் நடிப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு தானு சாருக்கு நன்றி” என்றார்.

படத்தில் நடித்துள்ள நடிகை ஐரா தயானந்த் பேசியபோது ”எல்லோருக்கும் நன்றி ட்ரெயின் என்னுடைய முதல் படம். நான் இங்கே மிகவும் பயத்திலிருந்து இருந்தேன் ஆனா மிஷ்கின் சாரும் அவர்களின் டீமு என்ன சௌகரியம் செய்தார்கள். என்னுடைய இரண்டாவது வீடு மாதிரி இருந்தது. விஜய் சேதுபதி சார் கூட நடிக்கும் போது மிகவும் நடுக்கமா இருந்தது அவர் என்ன சௌகரியம் செய்தார். விஜய் சேதுபதி அவர்களுடன் நடித்தது கனவு பலித்தது மாதிரி இருந்தது. எனக்கு தமிழ் தெரியாது என்னை இந்தப் படத்தின் நடிக்க வைத்ததற்கு தானு சாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாசர் சார் கூட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல ஆனாலும் அவர் வீட்டில் இருந்து சாப்பாடு எனக்கு கட்டிக்கொண்டு வந்தாரு பவுசியா மேடம்க்கு என்னுடைய நன்றி” என்றார்.

படத்தில் நடித்துள்ள நடிகை மாளவிக்க சுந்தர் பேசியபோது ”மிஷ்கின் சார் என்னை அழைத்த போது பாடல் பாடுவதற்கு என்று நினைத்தேன் இங்கே வந்த பிறகு தான் தெரிந்தது நடிப்பதற்காக என்று மிஷ்கின் சார் ரொம்ப நன்றி இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...