நடிகர் பாவா லட்சுமணனுக்கு வாக்கு கொடுத்தப்படி, வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் இலவசமாக கொடுத்தார் லெஜன்ட் சரவணன்.
முன்னதாக வீடு இல்லாமல் திண்ணையில் படுத்திருந்த நடிகர் பாவா லட்சுமணன் நிலையறிந்து, நடிகர் கூல் சுரேஷ், லெஜன்ட் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர், பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் மூலம் ₹2,00,000 கொடுத்து உதவினார்.
தற்போது, எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கி இருந்த நடிகர் பாவா லட்சுமணனுக்கு கட்டில், மெத்தை, பீரோ, வாஷிங் மிஷின், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, குக்கர், பாத்திரங்கள், ப்ரிட்ஜ், சோபா செட் என அனைத்து வீட்டு உபயோக பொருட்களையும் வாரி வழங்கினார் லெஜன்ட் சரவணன்.
நடிகர் கூல் சுரேஷ், லெஜன்ட் சரவணன் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர், பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் அந்த பொருட்கள் அனைத்தையும் வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள்.

