HomeGeneralமுதல் பார்வைக்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு... சுவாரஸ்ய அம்சங்களுடன் அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை வெளியிட தயாராகும்...

முதல் பார்வைக்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு… சுவாரஸ்ய அம்சங்களுடன் அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை வெளியிட தயாராகும் அர்ஜுன் தாஸின் ‘சூப்பர் ஹீரோ’ படக்குழு!

Published on

வில்லனாக நடிப்பில் மிரட்டி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றி ஈட்டி வரும் அர்ஜுன் தாஸ், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதைக்களத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இன்னும் இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தை வழங்குகிறார். மேலும், நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் ஆர்வமுள்ள ரெடாக்டட் ஸ்டுடியோஸின் ஷான்ஜன் ஜி, இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.
புதுமையான கதைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் கே.எஸ். சினிஷ். இயக்குநராக ‘பலூன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தயாரிப்பாளராக ‘டிக்கிலோனா’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’ உருவாகியுள்ளது.
வில்லனாக நடிப்பில் மிரட்டி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றி ஈட்டி வரும் அர்ஜுன் தாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, தனது சிறப்பான நடிப்பால் கவனம் பெற்றுவரும் தேஜு அஷ்வினி நடித்துள்ளார். மேலும், ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் வில்லனாக சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். ‘லோகா – சாப்டர் ஒன்’, சமீபத்தில் வெளியான ‘பரிமளா & கோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் காம்பினேஷன் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று.
இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர், ‘பலூன்’ திரைப்படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். கதையின் மீதான நம்பிக்கை, தெளிவான திட்டமிடல் என விக்னேஷின் அணுகுமுறை படக்குழுவினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புதிய திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் கே.எஸ். சினிஷ், இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ மூலம் கார்த்திக் யோகியையும், தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படம் மூலம் இயக்குநர் ராமையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கில் ‘குஷி’, மலையாளத்தில் ‘ஹிருதயம்’, தமிழில் ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட படங்களில் மனதை வருடும் இசை கொடுத்த ஹிஷாம் அப்துல் வஹாப் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Latest articles

நான் முழு நீள படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதையை, கதாபாத்திரத்தை என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை! –‘அருள்வான்’ திரைப்படத்தினை பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அருள்நிதி

அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் 'அருள்வான்' திரைப்படத்தினை பத்திரிகையாளர் சந்திப்பு...

ZEE5 தளத்தில் ஜூலை 10 முதல் ஜெயராம், மிஷ்கின், யோகிபாபு நடித்துள்ள கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்  ‘பரிமளா & கோ.’

ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர்...

Over 80 years, AVM Studios has been synonymous with setting benchmarks in the Indian film industry.

Having produced 179 feature films, 55 television serials and one web series, our company...

பிரதீப் ரங்கநாதன் -மமீதா பைஜு- அஸ்வத் மாரிமுத்து- தி ஆல்ஃபா யூனிட்- சாய் அபயங்கர்- கூட்டணியில் தயாராகும் PRS01

நடிகராக அறிமுகமாகி, ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை வழங்கி, தமிழ் சினிமாவின் நவீன ஆளுமையாக அடையாளத்தை பெற்றிருக்கும்...

More like this