சீரியல் ஆர்டிஸ்ட் சித்து கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ‘தி டார்க் ஹெவன்.’
‘கோதை என்டர்டெயின்மெண்ட்’ மற்றும் ‘எம்.எஸ்.ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி’ தயாரித்துள்ள இந்த படம் ‘எ சித்து இன்வெஸ்டிகேஷன்’ என்கிற டேக் லைனுடன் ஜூலை 17-ல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.
நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. ‘ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த 27.6.2016 அன்று சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்வில் படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது, “இயக்குநர் பாக்யராஜ் சார் காலமானது வருத்தமாக இருக்கிறது. சினிமாவுக்கு வந்து நான் முதலில் அவரிடம் தான் கதை சொன்னேன்.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷரண் இஷ்டப்பட்டு வந்தார் .அவர் இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருக்காது. அதேபோல் கோபால் அவர்கள், என் தம்பி மனோஜ் ஆகியோர் பெரிதும் பக்கபலமாக நின்றார்கள்.அது போல இந்தப் படத்திற்கு நிறைய பேர் எனக்குத் துணையாக நின்று இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி. சித்து ஒரு சிறப்பான இடத்திற்கு இந்தப் படத்தின் மூலம் செல்வார். நான் திருநெல்வேலிக்காரன்,சென்னையைச் சேர்ந்தவன் அல்ல. என் படத்தில் தமிழ் பேசும் நாயகியாக தர்ஷிகா வந்ததில் பெரிய மகிழ்ச்சி. அடுத்து ரித்விகா போன்று ஒவ்வொருவராக இந்தப் படத்திற்குள் வந்த பிறகு படம் வேறு மாதிரியாக மாறிவிட்டது .நான் சீன் பேப்பரைக் கொடுத்து விட்டால் அவர்கள் தானாக எல்லாம் செய்து விடுவார்கள் என்கிற அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரையும் நான் மிகவும் சிரமப்படுத்தி இருக்கிறேன். இந்தப் படத்தின் மீதும் என் மீதும் சிலருக்குச் சந்தேகம் இருந்தது .சந்தேகப்பட்டார்கள் .ஆனாலும் நான் இந்தப் படத்தை முடித்து விட்டேன்.மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்றார்.
படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது, “எனக்குக் குருநாதர் போல இருப்பவர் மைம் கோபி அண்ணன். அவர் ஒரு நடிப்பு பயிற்சிப்பள்ளி வைத்திருக்கிறார். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குப் பலரின் அறிமுகங்கள் கிடைத்தது அவரால்தான்.
இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப் பற்றி சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் நம்மை நாமே முன் வைக்க வேண்டும் .அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ‘திருமணம்’ தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தில் நடித்தவர்கள் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன். உதாரணத்திற்கு இரவு மூன்று நான்கு மணிக்கு படப்பிடிப்பில் இருந்தால் கூட ஜெயக்குமார் சார் வந்து எங்களிடம் பேசி சிரிக்க வைப்பார் .எப்படி அவரால் முடிகிறது என்று நினைப்பேன்.இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றுக் கொண்டேன்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கம் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன்” என்றார்.
நடிகை ரித்விகா பேசும்போது, “இவ்வளவு தூரம் இந்தப் படம் வருமா என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு 70% படத்தை எடுத்துவிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்து இருக்கிறதே ஒரு சாதனைதான் .ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு இவர்களது விடாமுயற்சி தான் காரணம். படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்சினை வரும்.புரிந்து கொள்வதில் சிக்கல் வரும்.மழை பெய்ய வேண்டும் என்று பார்த்தால் அன்று மழை வராது.மழை வேண்டாம் என்றால் மழை வரும்.

