HomeGeneralஇந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

Published on

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான் – இந்தியா திரைப்படம் ‘நாகபந்தம்.’

இந்த படம் வரும் ஜூலை 3-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் சென்னையில் பத்திரிககையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் நடிகர் விராட் கர்ணா பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம். இன்று ‘நாகபந்தம்’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக இங்கு வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஊடக நண்பர்கள், படக்குழுவினர் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி. குறிப்பாக எங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களில் அதிகமாக ஈடுபட ஊக்குவித்து வருகிறார்கள். ஏனெனில் அது மனதிற்கும் உடலுக்கும் அமைதியையும் சக்தியையும் அளிக்கிறது. ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை முடித்த பிறகு நான் ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் வலிமையாக உணர்கிறேன்.

இந்தப் படம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், தைரியம், கோவில்களின் மரபு மற்றும் நமது தொன்மையான நாகரீகத்தின் பல அம்சங்களை பேசுகிறது. நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும்.

‘நாகபந்தம்’ திரைப்படத்தில் நான் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு அறிமுக நடிகராக இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

நான் கொஞ்சம் பதட்டமாக இருப்பதால் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். சென்னை மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நடிகை நபா நடேஷ் பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம். முதலில் கலைப்புலி எஸ். தாணு சார் மற்றும் ஏ எம் ரத்னம் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை.

‘நாகபந்தம்’ திரைப்படம் வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது சாதாரணமான திரைப்படம் அல்ல. நமது வரலாறு, மர்மம், சாகசம், ஆக்சன், திரில்லர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவம்.

இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. படத்தின் கதையும், உருவாக்கப்பட்ட உலகமும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? அதேபோல் படம் முழுவதும் உங்களை கவரும் என்று நம்புகிறேன். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து ‘நாகபந்தம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.”

 

Latest articles

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

குஷ்புவின் மகள், தனுஷின் மருமகன் நடிக்கும் ‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் லிமிடெட் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில்  நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ், நடிகை குஷ்பூவின் மகள்...

More like this

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...