HomeCinemaடார்க் ஜெயண்ட் சினிமா விமர்சனம்

டார்க் ஜெயண்ட் சினிமா விமர்சனம்

Published on

மனசு திக்திக்னு அடிச்சுக்கிற மாதிரி ஒரு ஹாரர் படம்.
ஹீரோவுக்கு ஏகப்பட்ட கடன் தொல்லை. வில்லேஜ்ல இருக்கிற பூர்வீக சொத்தை வித்து பிரச்சனையை ஆஃப் பண்ணலாம்னு பொண்டாட்டியையும் தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு கிராமத்து வீட்டுக்கு போறார். அந்த வீட்ல ஏதேதோ அமானுஷ்ய விஷயங்கள் அவங்களை சுத்துப் போட்டு நிம்மதிக்கு ஆப்பு வைக்குது. ஹீரோவோட உடம்புக்குள்ளேயே ஏதோவொரு அமானுஷ்ய சக்தி பூந்துக்கிட்டு வெறியாட்டம் போடுது. அந்த வீட்டை விட்டு யாரும் உயிரோட வெளியேற முடியாதுங்கிற அளவுக்கு நிலைமை சீரியஸாகுது.
இப்படி பயங்கரமா தொடங்குற படத்துல அந்த வீட்டுக்குள்ள அமானுஷ்ய சக்திகள் நடமாடுறதுக்கு காரணம் என்னங்கிறது ஃபிளாஷ்பேக்கா ஓப்பனாகுது. அதுலதான் சோனியா அகர்வால் வர்றாங்க. கொலையெல்லாம் செய்றாங்க. ஏன் எதுக்காகங்கிறதை தெரிஞ்சிக்கிறப்போ பயத்துல நாடி நரம்பெல்லாம் என்னவோ பண்ணுது. நடிப்பு கேரக்டருக்கு பொருத்தமா இருக்குது.
அதையெல்லாம் முடிச்சுக்கிட்டு வந்தோம்னா, ஹீரோ தன்னை சுத்தி வளைச்சிருக்கிற பிரச்சனைலேருந்து எப்படி எஸ்கேப்பாகிறார் அப்படிங்கிற சீனெல்லாம் பரபரப்பா கடந்து போவுது.
ஹீரோவா நடிச்சிருக்கிற ஆதர்ஷ் மதிகாந்த், ஆரம்பத்துல அதிர்ச்சி மேல அதிர்ச்சி தாக்கி மரண பயத்தை கண்ணுல காட்டுறாரு. அவருக்குள்ள துஷ்ட சக்தி நுழைஞ்சபிறகு அவருகூட இருக்குறவங்களுக்கும் ஆடியன்ஸுக்கும் அதே பயத்தை கடத்துறாரு.
ஹீரோவுக்கு வைஃபா வர்றது நடிகர் லிவிங்ஸ்டனோட டாட்டர் ஜோவிதா. ஹோம்லி லுக்ல அம்சமா இருக்காங்க. பயம் பதற்றம்னு நடிப்பும் நல்லா வருது.
சோனியா அகர்வாலுக்கு ஹஸ்பென்டா அருவி மதன் வர்ற பிகினிங் சீனெல்லாம் சாத்தான் வழிபாடு, நரபலின்னு உடம்பு நடுங்க வைக்கிற லெவல்ல இருக்குது. மதன் வழக்கம்போல கேரக்டருக்கு பொருத்தமா நடிச்சிருக்காரு. பாக்யராஜ், லிவிங்ஸ்டன் இரண்டு பேரோட கெஸ்ட் அப்பியரன்ஸ் நல்லா வந்திருக்கு.
சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவுல கிராமத்து அழகை ரசிக்க முடியுது. அமானுஷ்ய அர்ப்பாட்டத்துக்கு ஏத்தபடி வெச்சிருக்கிற கேமரா கோணங்கள் படத்துக்கு பலமா அமைஞ்சிருக்கு. ஸ்க்ரின்பிளேல இருக்குற மிரட்டலை அதிகரிச்சிருக்கு விக்னேஷ் ராஜாவோட பிஜிஎம்.
கதை ஒரு வீட்டுக்குள்ளேயே சுத்துறதுனால கொஞ்சம் அலுப்பு சலிப்பு வரத்தான் செய்யுது. அதையெல்லாம் மீறி திகில் அனுபவம் படம் பார்த்து முடிச்ச பிறகும் கூடவே வர்ற மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். அதுக்காகவே ஒரு முறை பார்க்கலாம்.
Rating 3 /5

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this