HomeGeneralசோனி லிவ்வில் (Sony LIV) வெளியாகும் 'அதிரடி.' நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? 5 முக்கிய...

சோனி லிவ்வில் (Sony LIV) வெளியாகும் ‘அதிரடி.’ நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? 5 முக்கிய காரணங்கள்

Published on

கல்லூரி வாழ்க்கை, நண்பர்கள், போட்டிகள், கொண்டாட்டங்கள்… நம் வாழ்நாளின் மிகச் சிறந்த நினைவுகளை உருவாக்குவது இந்த நாட்கள்தான். அந்தத் துடிப்பான கல்லூரிப் பருவத்தை நகைச்சுவை, ஆக்ஷன், இசை மற்றும் ஏக்கம் கலந்த ஒரு பக்காவான என்டர்டெய்னராகக் கொண்டு வருகிறது ‘அதிரடி’ (Athiradi) மலையாளத் திரைப்படம். ஜூன் 19 முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் அங்கிருக்கும் புகழ்பெற்ற கலாச்சாரத் திருவிழா (Cultural Fest) பின்னணியில், அட்ரினலின் எகிற வைக்கும் கொண்டாட்டமாக உருவாகியுள்ள ‘அதிரடி’ படத்தை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்?
 இதோ 5 காரணங்கள்:
1. கல்லூரி நினைவுகளைத் தூண்டும் ஒரு கொண்டாட்டம்!
‘அதிரடி’ படத்தின் மையக்கதையே கேம்பஸ் வாழ்க்கைதான். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அசம்பாவிதத்தால் தடைசெய்யப்பட்ட பி.சி.இ.டி (BCET) கல்லூரியின் புகழ்பெற்ற ‘ஆரோஹன்’ (Arohan) திருவிழாவை மீண்டும் நடத்தத் துடிக்கிறான் சாம்குட்டி (பேசில் ஜோசப்). இந்த முயற்சியில் தொடங்கும் சவால்கள், கல்லூரி அரசியல், மாணவர்களுக்கிடையேயான மோதல்கள், நட்பு எனப் படம் பார்ப்பவர்களை அப்படியே தங்களின் கல்லூரி நாட்களுக்குக் கூட்டிச் செல்லும்.
 2. டொவினோ தாமஸின் மிரட்டலான, நகைச்சுவை நடிப்பு!
இப்படத்தின் மிகப்பெரிய பலம் டொவினோ தாமஸ் ஏற்றுள்ள ‘ஸ்ரீகுட்டன் வெள்ளாயணி’ கதாபாத்திரம். ஒரு ரௌடியாக இருந்து மியூசிஷியனாக மாறும் இவரின் ஈகோ, சாம்குட்டியுடன் மோதும்போது படம் முழுக்க ஏகப்பட்ட நகைச்சுவை வெடிகள் வெடிக்கின்றன. டொவினோ தாமஸ் தன் வழக்கமான ஸ்டைல் மற்றும் அசாத்தியமான ஸ்கிரீன் பிரசன்ஸ் மூலம் ரசிகர்களைக் கவர்கிறார்.
3. பேசில் ஜோசப் மற்றும் நட்சத்திரப் பட்டாளம்!
தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் டைமிங் காமெடிக்கு பெயர்பெற்ற பசில் ஜோசப், சாம்குட்டி கதாபாத்திரத்திற்குப் பக்காவாகப் பொருந்தியுள்ளார். இவர்களுடன் தர்ஷனா ராஜேந்திரன், ரியா ஷிபு, ஜரின் ஷிஹாப், ஜியோ பேபி மற்றும் விஷ்ணு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து அஸாத்துகிறார்கள்.
4. காமெடி, இசை மற்றும் திருவிழா மிரட்டல்!
ஒரு பிரம்மாண்ட கல்லூரித் திருவிழாவின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே திரைக்குக் கொண்டு வந்துள்ளது இத்திரைப்படம். ‘ஆரோஹன்’ விழாவுக்கான கவுண்ட்டவுன் தொடங்கும்போது நடக்கும் கலாட்டாக்கள், வண்ணமயமான கொண்டாட்டங்கள், பாடல்கள் எனத் திரையரங்கு அனுபவத்தை ஓடிடியிலும் தரும் அளவுக்கு எனர்ஜியாகப் படம் நகர்கிறது.
5. ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்!
சூப்பர் ஹிட் ‘மின்னல் முரளி’ படத்தின் திரைக்கதை எழுத்தாளரான அருண் அனிருதன் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் இது. பேசில் ஜோசப் மற்றும் டாக்டர் ஆனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள ‘அதிரடி’ திரைப்படம் காமெடி, ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர்.
உங்களது கல்லூரி நினைவுகளை அசைபோடவும், குடும்பத்துடன் ஒரு ஜாலியான படத்தைப் பார்க்கவும் ‘அதிரடி’ ஒரு சிறந்த சாய்ஸ்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...