HomeCinema‘குட் நைட்' வெற்றிக் கூட்டணியின் அடுத்தபடம்‘லவ்வர்.' அசத்தலாய் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘குட் நைட்’ வெற்றிக் கூட்டணியின் அடுத்தபடம்‘லவ்வர்.’ அசத்தலாய் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர்  பிரபுராம் வியாஸ் (Youtube சீரிஸ் லிவ்இன் புகழ்) இயக்கத்தில் குட்நைட் மணிகண்டன் நடித்திருக்கும் ‘லவ்வர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படத்தில் மணிகண்டனின் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.

உலகின் ஆதி உணர்வு காதல். ஆனால் எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு, சிக்கல் மிகுந்ததாகவே இருந்து வருகிறது. இக்கால இளைஞர்களின் உலகையும், ரிலேஷன்ஷிப்பில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களின் காதல் என எல்லாவற்றையும் பற்றி அழகாக பேசும் ஒரு ரொமான்ஸ் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. அனைவரையும் கவரும் வகையில்,  இப்படத்தை ஒரு கமர்ஷியல் கொண்டாட்டமாக,  அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ளார்.

குட்நைட் படம் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கியவேடத்தில் நடிக்கிறார்.

இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் வலிமையான  தொழில் நுட்பக்குழு இப்படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு நடத்தியுள்ளது.

முன்னதாக மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் மணிகண்டன் நடித்த குட்நைட் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்நிலையில் இக்கூட்டணி இணையும் இரண்டாவது படம் இதுவென்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர்  இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது.

Latest articles

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

https://www.youtube.com/watch?v=2bwUK-NvtSI   ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல்...

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

More like this