HomeGeneral'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின்...

‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ராசாதி ராசா’ வெளியீடு!

Published on

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு ‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக ரவி மோகனுடன் இணைந்துள்ளது..
சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘ராசாதி ராசா’ இன்று வெளியிடப்பட்டது.
படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ள சோனி மியூசிக் நிறுவனம் சாம் சி.எஸ். இசையில், மீனாட்சி இளையராஜா பாடல் வரிகள் மற்றும் குரலில் உருவாகியுள்ள ‘ராசாதி ராசா’ பாடலை வெளியிட்டுள்ளது. அழுத்தமான அரசியல் பாடலாக இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படத்தின் இதர பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு, திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப்பூர்வமான அரசியல் திரில்லராக ‘கராத்தே பாபு’ உருவாகி உள்ளது” என்றார்.

Latest articles

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான...

மதுரை பின்னணியில்  குடும்பக் கதை… ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்!

‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை...

FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது

தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து...

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு… ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

https://www.youtube.com/watch?v=EOB0Ypf9DYY ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்! கதிர்,...

More like this