HomeGeneralசென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு!

சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு!

Published on

பிரபல இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ என்ற புதிய நூல் இன்று சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் வீட்டில்
எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி அருகிலும் எளிய முறையில் வெளியிடப்பட்டது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நேரடி அன்பைப் பெற்ற முன்னாள் மாநகராட்சி நிர்வாக மேலாளர் திரு. ராஜேந்திரன் இந்நூலினை முறைப்படி வெளியிட, அதன் முதல் பிரதியை நூலின் பதிப்பாசிரியர் ‘சந்தியா’ நடராஜன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்திய மத்திய அரசின் சார்பில் இந்த நூலின் முக்கியத்துவத்தைக் கருதி, இதனை 24 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான வாக்குறுதியை மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு திரு. எல். முருகன் அவர்கள் ஏற்கனவே வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நூல் வெளியீடு குறித்து இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது: குழந்தைகளின் சிந்தனை மேன்மைக்கு ‘சினிமா ரசனைக் கல்வி’ மிக அவசியமானது. உலகின் சிறந்த சினிமாக்களை பள்ளி பருவத்திலேயே அவர்களுக்கு நாம் காட்டினால் அதன் மூலமாக ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளத்திலே பல மாற்றங்கள் உண்டாகும். இந்த நூலின் வழியாகத் தமிழகத்தில் சிறார்கள் மற்றும் பொதுமக்களிடையே சினிமா ரசனை குறித்து ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.”

Latest articles

மோகன்லால், மீனா, ஜீத்து ஜோசப் கூட்டணியின் திரிஷ்யம் 3 ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் காணலாம்!

ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி...

விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியின் ‘நூறு சாமி’ படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ழ்வில் திரண்ட முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகள்! 

'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும்...

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான...

‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ராசாதி ராசா’ வெளியீடு!

https://www.youtube.com/watch?v=NLXdjgODpFg பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா...

More like this