HomeCinemaபரிமளா அண்ட் கோ விமர்சனம்

பரிமளா அண்ட் கோ விமர்சனம்

Published on

சிட்டியில் பெரிய கொலைகார ரவுடி கொலை செய்யப்பட, போலீஸ் தரப்பு அந்த குற்றத்தை பரிமளா குடும்பத்தினர் செய்திருக்கலாம் என சந்தேகப்பட்டு, விசாரிக்கத் துவங்குகிறது. சந்தேகத்துக்கான காரணங்கள் சுவாரஸ்யமாக இருக்க, கொலை யாரால் செய்யப்பட்டது, எதற்காக செய்யப்பட்டது என்பது படத்தின் நிறைவுக் காட்சி.

பரிமளா என்பது ஆணுடைய பெயர் என தெரிந்து கொள்கிற ஆரம்பக் காட்சி இன்ட்ரஸ்டிங். பரிமளாவாக வருகிற ஜெயராம், தன் குடும்பத்தினர் அந்த ரவுடியை கொலை செய்திருக்க வாய்ப்பிருப்பதால் யார் செய்திருப்பார்கள் என கண்டறிய முயற்சிப்பதும், தன்னையும் தன் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ள எடுத்துக் கொள்கிற பாபநாசம் கமல்ஹாசன் பாணியிலான நடவடிக்கைகளும் வெரி வெரி இன்ட்ரஸ்டிங்.

ஜெயராமின் மகள்களாக வருகிற சஞ்சனாவும் அனந்திகாவும் தங்களுக்குள் அடிக்கடி அடித்துக் கொள்வதிலிருந்து, ரவுடியுடனான தொடர்பு வரை அத்தனையும் ரகளை. காமெடி கலாட்டாக்களில் ஜெயராமின் மனைவியாக வருகிற ஊர்வசி வழக்கமான கோணங்கித் தனங்களால் லேசாக கலகலப்பூட்டுகிறார்.

விதம் விதமாக எதையாவது தின்று கொண்டும் குடித்துக் கொண்டும் கொலை வழக்கை விசாரிக்கும் விதத்தால் சிரிக்க வைத்து, கிளைமாக்ஸில் மகனை இழந்த தந்தையின் வலியை நடிப்பில் இயல்பாக காண்பித்து மனதில் நிறைகிறார் மிஸ்கின்.

ஏடாகூடமான பரிமளா ஃபேமிலிக்கு தன் வீட்டை வாடகைக்கு விட்டு போலீஸ் விசாரணை அதுஇதுவென மாட்டிக்கொண்டு அவதிப்படுபவராக யோகிபாபு வழக்கமான தெனாவட்டு டெம்ப்ளேட் நடிப்பைத் தந்திருக்கிறார்.

ரவுடியிஸத்தில் ஊறியவராக கொலை வெறியை சரியான மீட்டரில் காட்டியிருக்கும் சாண்டி மாஸ்டர், ஜெயராமின் மகள்களுடன் சண்டை சச்சரவில் ஈடுபடுவது  ரசிக்க வைக்கிறது.

தூண்டு துக்கடா கேரக்டர்களில் கூட பரிச்சயமான நடிகர் நடிகைகளைப் பார்க்க முடிகிறது.

பட்டினப்பாக்கம் கடற்கரையையே சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு தராதபடியான கோணங்களில் கேமராவை சுழல விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ். பின்னணி இசை போதுமான அளவில் இருக்கிறது.

சமூகம் எதனால் அதிகம் சீரழிகிறது என்பதையும், அந்த சீரழிவை தடுக்க முடியாமல் போவதற்கு காரணம் என்ன என்பதையும் எடுத்துக் காட்டும் சீரியஸான சப்ஜெக்டை எடுத்துக் கொண்டு, சிரித்து ரசிக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். சீரியஸில் சிரிப்பும், சிரிப்பில் சீரியஸும் சரியான கலவையாக இல்லாததால் படம் தருகிற உணர்வு மசாலா உதிர்ந்த வறுத்த மீனை சுவைத்தது போலிருக்கிறது.

Rating 3 / 5

Latest articles

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான...

‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ராசாதி ராசா’ வெளியீடு!

https://www.youtube.com/watch?v=NLXdjgODpFg பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா...

மதுரை பின்னணியில்  குடும்பக் கதை… ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்!

‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை...

FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது

தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து...

More like this