HomeCinemaரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

Published on

அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது.

பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவற்றின் மூலம் இத்திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.

Latest articles

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது....

More like this