HomeCinemaவெற்றிப் படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸின் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு தலைப்பு...

வெற்றிப் படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸின் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

Published on

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ’மாவீரன்’ மற்றும் ’3BHK’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்போது அந்த படத்திற்கு ’காவிய காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  நகைச்சுவையோடும் கலர்ஃபுல்லாகவும் உருவாகியுள்ள இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்கியுள்ளார். சுவாரஸ்யமான ரொமாண்டிக் எண்டர்டெயினர் திரைப்படமாக இது இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவில், முன்னணி நடிகர்களுடன் பால சரவணனும் இடம்பெற்றிருப்பது படத்தின் நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறது. வண்ணமயமான மற்றும் வசீகரமான காட்சிகள் உற்சாகமான காதல் கதையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.
‘குடும்பஸ்தன்’ படத்தில் தனது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த சான்வே மேக்னா கதாநாயகியாகவும், நடிகர் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
சாந்தி டாக்கீஸ் பேனரில் அருண் விஸ்வா தயாரித்துள்ள இந்த படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்கியுள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், கலை இயக்குநராக சிஎஸ் பாலச்சந்தர், ஆடை வடிவமைப்பாளராக கிருத்திகா சேகர், இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
ரொமான்ஸ், எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த கிளிம்ப்ஸ், முதல் பார்வை இன்றைய தலைமுறை மற்றும்  குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் டீசர், இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில்…

Latest articles

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

பீப் சினிமா விமர்சனம்

புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் 'பீப்.' ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து...

டோரதி’யின் உலகையும் இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க ஸ்பெஷல் லாரி ரோடு ட்ரிப்! 

 ’டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, இளையராஜாவின் இசையுடன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும்...

More like this