HomeGeneralபுராண கால வரலாற்று பின்னணியில் ஆரி அர்ஜுனன் நடிப்பில் மிரட்டலான ஆக்சன் திரில்லர் 'பகவான்' வெளியீட்டுக்கு தயாராகிறது!

புராண கால வரலாற்று பின்னணியில் ஆரி அர்ஜுனன் நடிப்பில் மிரட்டலான ஆக்சன் திரில்லர் ‘பகவான்’ வெளியீட்டுக்கு தயாராகிறது!

Published on

வித்தியாசமான கதையம்சத்துடன்,  சு.காளிங்கன் இயக்கியுள்ள திரைப்படம் ‘பகவான்.’
ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார். ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் சு. காளிங்கன் கூறுகையில் ”இந்த பிரபஞ்சத்தில் நமக்கு புரியாத பல விசயங்கள்  இருக்கிறது. அதில் எண்ணற்ற ரகசியங்கள் இருக்கிறது. நாம் எல்லோரும் பகவானை வணங்குகிறோம். இந்த முழு பிரபஞ்சத்தை இயக்குபவர்  பகவான் என்றால், அவர்  யார்?,  அவர் வெறும் உருவமா? இல்லை வேறெதுவுமா? அப்படியெனில் இல்லுமினாட்டி யார்? இந்த கேள்விகளுக்கான பதில்  தான் இப்படத்தின் மையம். நாம் அறியாத புராண கால வரலாற்றின் பின்னணியில் மித்தாலஜிகல் திரில்லராக இப்படத்தை  உருவாக்கியுள்ளோம்.
இந்த படம் ஒரு சாதாரண கதையாக இல்லாமல், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் விதமாக உருவாகியுள்ளது. நாம் அறிந்த மகாபாரத கதையின் ஒரு பகுதியும் இதில் வரும், இப்படத்தில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது, நாம் பொதுவாக கவனிக்காமல் இருக்கும் ஒரு சாதாரண உயிரினமான பல்லி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக இடம்பெறுகிறது. இப்படி பல சிறப்புகள் இப்படத்தில் உள்ளன.  மொத்தத்தில் பகவான் படம் ஒரு புதிய சிந்தனையுடன், வித்தியாசமான கதை அமைப்பு மற்றும் பலத்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் படைப்பாக இருக்கும்” என்றார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் வெளியாகும். Seventh ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கண்ணன் இப்படத்தை மே மாதம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் கணேசன் எடிட்டிங் செய்திருக்கிறார். சம்பத் ஜியின் பாடல்வரிகளுக்கு ப்ரசன் பாலா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார். கலா மாஸ்டர் நடன அமைப்பையும், பாலையா கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளதுடன், ஆடை வடிவமைப்பை வினையா தேவ் மேற்கொண்டுள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை புவன் செல்வராஜ் கவனித்துள்ளார். நிர்வாக தயாரிப்பை மூவேந்தர் மேற்கொண்டுள்ளார்.

Latest articles

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நடிகர் பினு. டி. ஜான் போஸ்கோ… திரைப்பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து உற்சாகம்!

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த பினு. டி. ஜான் போஸ்கோ பத்தாம் வகுப்பிலிருந்து  பதினொன்றாம்...

கலக்கல் ஹிட்டான ‘கான் சிட்டி’ படத்தின் முதல் சிங்கிள் கொரியன் ஃபேமிலி சாங் ‘ரா ரா ரங்கையா.’

https://www.youtube.com/watch?v=e-uMIm-Yxhk பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி...

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு!

துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஐ ஆம் கேம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள்...

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

சந்தீப் கிஷன் - கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் -...

More like this