HomeCinemaநான்கு கதாநாயகிகள் நடிக்கும் 'எஸ் கே எஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லதா ரஜினிகாந்த், நடிகர்...

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லதா ரஜினிகாந்த், நடிகர் லெஜன்ட் சரவணன் வெளியிட்டு வாழ்த்து!

Published on

பெண்களுக்கு சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எஸ் கே எஸ்.’

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா – அன்னா ஆஷா- கீர்த்தி – சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லதா ரஜினிகாந்த், நடிகர் லெஜன்ட் சரவணன் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டாக்டர் சாய்பிரபா மீனா இயக்கியுள்ள எஸ் கே எஸ் திரைப்படத்தில் சாய்பிரபா மீனா, தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா, மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ராஜ் மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷகிலா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்த திரைப்படம் பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இன்றைய சூழலில்… ஒவ்வொரு பெண்ணும் மற்றவர்களை நம்பாமல் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான புதிய வழிமுறைகளை பற்றி அவர்களே சுயமாக சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதை அழுத்தமாக விவரித்திருக்கிறோம்” என்றார்.

படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்றும் கோடை விடுமுறையில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எம் சி பால்பாண்டி – ஜூஜூ மற்றும் முத்து ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனீஷ் – அலெக்ஸ் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். நந்தகுமாரன் கலை இயக்கத்தை கவனிக்க நவீன் குமார் , எஸ் டி ராஜ் மற்றும் வினோத் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

சாய் ராம் ஏவி.ஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் & எஸ் பி எம் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அண்ணா ஆஷா & சாய் ஷரண் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். எம்.ரேணுகா- கே. ரமேஷ் – ஆனந்தி குணா – டி ஜே டவுன் பிரேம் – நெல்சன் – சாய் தீபா – எம்.பி. பீர் முஹமது – ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளனர்.

Latest articles

காமெடி, சென்டிமென்ட், ஆக்சன்… முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகும் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

இளம் தலைமுறையின் கனவுகள், முயற்சி மற்றும் வெற்றியை மையமாக கொண்டு உருவாகும் 'பீட்சா பாய்ஸ்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. சேகர்...

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தொழில்துறை சூழலை பாதுகாக்க ஒன்றிணைகின்றனர்; புதிய சங்கத்திற்கான வழிநடத்தல் குழு அமைப்பு

ஹைதராபாத், 19ஆம் ஏப்ரல் 2026 அன்று Hotel Dasapalla-வில் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு...

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=h5OHXjkAgbA தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

More like this