HomeCinema'துரந்தர் தி ரிவெஞ்ச்' படத்தின் 'ஆரி ஆரி' டைட்டில் ட்ராக் வெளியானது!

‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தின் ‘ஆரி ஆரி’ டைட்டில் ட்ராக் வெளியானது!

Published on

‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிதொடர்ந்து சாதனை படைத்து வருவதோடு, 45க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

டிரெய்லர் வெளியானதில் இருந்தே, அதில் பின்னணி இசையாக வந்த ‘ஆரி ஆரி’ பாடலை ரசிகர்கள் முணுமுணுக்க தொடங்கிவிட்டனர். மேலும், இப்பாடலின் வெளியீட்டிற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்போது இந்த அதிரடியான பாடல் டி-சீரிஸ் யூடியூப் சேனலில் தற்போது வெளியாகியுள்ளது. துடிப்பான பீட்ஸ், வலிமையான குரல்கள் மற்றும் அதிரடி ராப் வரிகள் அடங்கிய இந்த பாடல், படத்தின் தீவிரமான உலகை பிரதிபலிப்பதோடு, அடுத்த பெரிய வைரல் ஆந்தமாக மாறும் வகையில் ஒரு சிறந்த இசை அனுபவத்தை வழங்குகிறது.
ஷாஸ்வத் சச்தேவ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை, அவரே அரேஞ்ச் மற்றும் ப்ரோக்ராமிங் செய்துள்ளார். நவீன இசையுடன் பஞ்சாபி தாக்கத்தை இணைத்து, கேட்போரை ஆட வைக்கும் வகையில் இந்த ட்ராக் ஈர்க்கக்கூடிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. நவ்தேஜ் சிங் ரெஹால், கான் சாப், ஜாஸ்மின் சாண்ட்லாஸ் மற்றும் சுதிர் யதுவன்ஷி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இதற்கான ராப் வரிகளை எழுதி பாடியுள்ளனர் ரெபெல் மற்றும் டோக்கன். பிரபல பாடலாசிரியர் இர்ஷாத் கமில் மற்றும் பாம்பே ராக்கர்ஸ் இணைந்து பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளனர். இதன் ஸ்கோரை ஆடம் லூகாஸ் தயாரித்துள்ளார்.
பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும் இப்பாடலின் மியூசிக் வீடியோ, ரன்வீர் சிங்கின் ஆக்ரோஷமான மற்றும் கம்பீரமான தோற்றத்தை முன்னிலைப்படுத்தி, பாடலை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. ஸ்டைலான ஆக்‌ஷன் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் நிரம்பியுள்ள இந்த வீடியோ, ரன்வீர் சிங்கின் சக்திவாய்ந்த திரை ஈர்ப்புடன் படத்தின் பிரம்மாண்டத்தையும் தீவிரத்தையும் வெளிப்படுத்துகிறது.
அதிரடியான இசையையும், மாஸான காட்சிகளையும் ஒன்றிணைத்து, படத்தின் இசை பயணத்தை ஒரு விறுவிறுப்பான, ஹை-ஆக்டேன் தாக்கத்துடன் ‘ஆரி ஆரி’ பாடல் தொடங்கி வைத்துள்ளது.
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் – துரந்தர் பழிவாங்கல். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
ஆதித்யா தர் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த ஹை-ஆக்டேன் ஸ்பை-ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தை, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். குடி பத்வா மற்றும் உகாதி பண்டிகையை முன்னிட்டும், ரம்ஜானுக்கு முன்பாகவும், 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
முகம் தெரியாத மனிதர்களின் இந்த கதை, 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் விரிகிறது.

Latest articles

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் ‘பரிபாடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=cfHo9hBpas8 ‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட்...

உற்சாகமாக நடந்த யோகி பாபு நடித்துள்ள ‘சிங்காரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ்....

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்! வித்தியாசமான புரமோஷனில் படக்குழு!

கன்னியாகுமரி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தூர்...

More like this