HomeCinemaஇயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தொடங்கி வைத்த ஜே பி சினிமாஸ் நிறுவனத்தின் முதல் படம்!

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தொடங்கி வைத்த ஜே பி சினிமாஸ் நிறுவனத்தின் முதல் படம்!

Published on

முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”பழைமையான கேமரா ஒன்றை மையமாக வைத்து ஃபேண்டஸி காமெடி ஜானரில் இப்படம் தயாராகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு அரங்கம் அமைத்து, அதில் படப்பிடிப்பு நடத்துகிறோம்” என்றார்.

ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை என். பி. ஸ்ரீகாந்த் கவனிக்க கலை இயக்கத்தை வி. சண்முகராஜா மேற்கொள்கிறார். சண்டை பயிற்சியை ராம் குமாரும், ஆடை வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ நிஷா பாலாஜியும், நடன அமைப்பை சந்ததோசும் கையாள்கிறார்கள். ஃபேண்டஸி காமெடி திரைப்படமாக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் தயாரிக்கிறார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this