HomeCinemaலீடர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா... களைகட்டிய கமலா தியேட்டர்... உற்சாக கொண்டாட்டமாக்கிய ரசிகர்கள்!

லீடர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா… களைகட்டிய கமலா தியேட்டர்… உற்சாக கொண்டாட்டமாக்கிய ரசிகர்கள்!

Published on

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது.

ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், “அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ‘லீடர்’ அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, ‘லீடர்’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட ‘லீடர்’ ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.

Latest articles

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.'...

More like this

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...