HomeCinemaநெட்ஃபிலிக்ஸில் வெளியானது பிரியங்கா மோகன் நடித்துள்ள ’மேட் இன் கொரியா’ டிரெய்லர்!

நெட்ஃபிலிக்ஸில் வெளியானது பிரியங்கா மோகன் நடித்துள்ள ’மேட் இன் கொரியா’ டிரெய்லர்!

Published on

பிரியங்கா மோகன் நடித்துள்ள ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது. முன்னதாக டிரெய்லரை இன்று நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது.

நீங்கள் கனவு காணும் விஷயங்கள் உங்கள் கதையின் தொடக்கம் மட்டுமே! தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரிலிருந்து முன்பின் அறிமுகமில்லாத தென் கொரியாவின் சியோல் நகரத்திற்கு செல்லும் செண்பாவின் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின்

தமிழ்நாடு மற்றும் சியோல் நகரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையில் செண்பா தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் புதிய அனுபவங்கள், சவால்கள் மற்றும் புது உறவுகள் வழியாக தன்னம்பிக்கையையும் சுய அடையாளத்தையும் கண்டுபிடிக்கும் பயணமே இப்படத்தின் மையக்கரு என்பதையே டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன், தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் மற்றும் நோ ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’, இந்தியா மற்றும் கொரியா என இரண்டு கலாச்சாராங்களையும் வாழ்க்கை முறைகளையும் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கிறது.

நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “’மேட் இன் கொரியா’ மற்றும் செண்பாவின் பயணம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்திருந்தது. உறுதியற்ற தருணங்களில் நமது வலுவான நிலைப்பாடும் சுயத்தை கண்டுபிடிப்பது பற்றிய கதை இது. ஒரு சாதாரண பெண்ணிலிருந்து தன்னம்பிக்கையுடன் பல சவால்களை எதிர்கொள்ளும் தைரியமான பெண்ணாக செண்பாவின் பரிணாமத்தை நடிப்பில் கொண்டு வந்தது நிறைவாக இருந்தது. நெட்ஃபிலிக்ஸூடன் முதன் முறையாக இணைந்திருக்கிறேன். செண்பாவின் கதை எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பு, ஆர்வம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றுடன் ஒருவரின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடித்தல் ஆகியவற்றை இந்தக் கதை பேசுகிறது.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this