HomeCinemaபெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து படம் எடுப்பது அவ்வளவு சுலபமானது இல்லை! - -'ஓ பட்டர்ஃப்ளை'...

பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து படம் எடுப்பது அவ்வளவு சுலபமானது இல்லை! – -‘ஓ பட்டர்ஃப்ளை’ படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குநர் விஜய் ரங்கநாதன் பேச்சு

Published on

அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் தயாரித்து இயக்கியுள்ள, உறவுகளின் மென்மையையும் கணிக்க முடியாத தன்மையையும் திரில்லர் பாணியில் பேசும் ‘ஓ பட்டர்ஃப்ளை’ திரைப்படம் படம் வரும் மார்ச் 6-ம் தேதி திரையரங்குளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் விஜய் ரங்கநாதன் நான் சினிமாவிற்கு வந்து 7,8 வருடங்கள் ஆகிவிட்டது. என் அப்பா மற்றும் அம்மா இருவரும் சினிமா பக்தர்கள். அதிலிருந்து எனக்கு ஈடுபாடு வந்தது. சினிமாவில் ஏதாவது தனித்துவமாக பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நிறைய காலம் எடுத்துக் கொண்டேன். இந்த கதையை நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதினாலும், மீண்டும் ஒரு எழுத்தாளருடன் இணைந்து எழுதினேன். இந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை தேடி அலைந்தோம். இந்த படம் ஏற்கனவே உள்ள பேட்டன்களில் இல்லை என்பதை உணர்ந்தோம். முன்னணி நிறுவனங்களிடம் இந்த கதையை எடுத்துக் கொண்டு சென்ற போது இந்த படத்திற்கான ரெஃபரன்ஸ் இல்லை. நண்பர்கள் இந்த படத்திற்காக அவர்களால் முடிந்த இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளனர்.

சினிமாவில் இண்ட்ரஸ்ட் உள்ளவர்களிடம் இந்த கதையை கொண்டு சென்றோம், அப்படி உள்ளே வந்தவர்கள் தான் எங்களது தயாரிப்பாளர்கள். அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த கதை தான். ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து படம் எடுப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. இந்த படத்தை முதலில் இருந்தே சிங்க் சவுண்டில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் கண்டிப்பாக தமிழ் பேச தெரிந்த நடிகை வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தோம். அப்படித்தான் நிவேதிதா இந்த படத்திற்கு வந்தார்கள். நிறைய பேரை இந்த கதாபாத்திரத்திற்கு முயற்சி செய்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிவேதிதா எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியான தருணம்.

நாசர் சாருக்கு எங்கள் படத்தின் ஐடியா பிடித்திருந்தது. இந்த படத்தில் அவரை வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். லட்சுமி பிரியா இந்த கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார்கள். மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒர்க்கை கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முக்கியமான ஒருவராக மாறி உள்ளார். இந்த படம் ஒரு யுனிக் அட்டெம்ப்ட். மார்ச் 6ம் தேதி படம் வெளியாக உள்ளது. உங்களது சப்போர்ட் தேவை” என்றார்.

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this