HomeMovie Reviewஆழி சினிமா விமர்சனம்

ஆழி சினிமா விமர்சனம்

Published on

கடத்தல் அதுஇதுவென குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற, பெரும் பணக்காரரான மூர்த்தி என்பவரின் மகளை வறுமைச் சூழலில் வழ்கிற குடும்பத்துப் பையன் காதலிக்கிறான். அவரது மகளும் அவனைக் காதலிக்கிறாள். அந்த காதலும் காதலனையும் பிடிக்காத மூர்த்தி, அந்த காதலனை போட்டில் வைத்து கொன்று கடலில் தூக்கிப்போட்டுவிட தீர்மானிக்கிறார். தீர்மானித்ததை செயல்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். அவரிடமிருந்து அவனால் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதே ஆழியின் திரைக்கதை…

மூர்த்தியாக வருகிற சரத்குமார், காதலுக்கு எதிரியாக நிற்கிற கொடூர குணம் கொண்ட அப்பாக்கள் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படியே நடந்து கொள்கிறார். அதில் வில்லனாக பல படங்களில் நடித்த அனுபவம் தெரிகிறது.

அவரது மகளாக தேவிகா சதீஷ் அழகாக இருக்கிறார். ஹீரோவை காதலிக்கும் வழக்கமான காதலியாக கச்சிதமாக கடமையாற்றுகிறார்.

காதலனாக வருகிற இந்திரஜித் ஜெகஜித், அப்பாவி காதலனாக எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருக்கிறார். அவருக்க கொடுக்கப்பட்ட காதலிக்கிற, காதலியின் அப்பாவிடம் அடிபட்டு ரத்தம் சிந்துகிற வேலையையும் சரியாகச் செய்திருக்கிறார்.

பிரபல சினிமா பி ஆர் ஓ நிகில்முருகன் கறிவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் படத்தின் ஆரம்பக் காட்சியின் பரபரப்புக்கு பக்காவாக உதவியிருக்கிறார்.

படத்தில் இன்னும் சில கேரக்டர்களை தவிர யாருமில்லை. அந்த ஒருசிலருக்கு ஜஸ்ட் தலை காட்டுகிற வாய்ப்பு மட்டுமே.

கடல், கடலுக்குள் போட், அதில் ஒரு காதலனுக்கும் காதலனின் அப்பாவுக்குமான மோதல் என்ற வட்டத்துக்குள் கிட்டத்தட்ட படத்தின் பெரும்பாலான காட்சிகள் அடங்கிவிட, ஆனந்த் என் நாயரின் ஒளிப்பதிவின் நேர்த்தி கவனம் பெறுகிறது.

ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும் கேட்கும்போது இதமாகவே இருக்கிறது. வில்லியம் ஃப்ரான்சிஸ் பின்னணி இசை திரைக்கதையிலிருக்கும் பரபரப்பை அதிகரிக்கிறது.

உண்மையான காதல் என்பது கடலைவிட ஆழமானது என்பதால் கடலின் பெயர்களில் ஒன்றான ‘ஆழி’யை படத்துக்கு தலைப்பாக வைத்த இயக்குநர் மாதவ் ராமதாஸன், கதை திரைக்கதையை இன்னும் கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக உருவாக்கியிருக்கியிருந்தால் ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் அதிரிபுதிரியாக இருந்திருக்கும்!

Rating 2.5 / 5

Latest articles

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

அசோக் செல்வன் நடித்து, வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகவிருந்த அன்பில் அவன் திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி...

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க 5 காரணங்கள்!

MCU ரசிகர்களே, மீண்டும் ஒன்று கூடுங்கள்! 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் ரசிகர்களை...

சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ & ‘Maamadura.’

தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு...

‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய துல்கர் சல்மான் ; அக்-1 உலகெங்கும் ரிலீஸ்!

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழுமலை’. உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்துவரும்...

More like this