HomeCinema’தாய் கிழவி’யை உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்; குடும்பத்தோடு திரையரங்குகளில் பாருங்கள்! -'தாய் கிழவி' படத்தின் ப்ரீ...

’தாய் கிழவி’யை உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்; குடும்பத்தோடு திரையரங்குகளில் பாருங்கள்! -‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

Published on

ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது. முன்னதாக படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன், “’தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். அடுத்து தலைவர் படம் இயக்க இருக்கும் சிபிக்கும் வணக்கம். நாம் இருவரும் சேர்ந்து சுதனுடன் படம் செய்யவதாக இருந்தது. நீ மட்டும் இப்போது எஸ்கேப். சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள். சினிமாவில் வெற்றி பார்த்து பின்பு என் குடும்பம் நன்றாக இருந்தது. இருந்தாலும் என்னுடைய நண்பர்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னைவிட சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் அருண்ராஜா. அவர் சொன்னதுபோல, அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ். கனவோடு திருச்சியில் இருந்து வந்தவர்கள் சேர்ந்து ‘கனா’ என்ற படத்தை எடுத்தோம். பின்பு ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ என பல படங்கள் தயாரித்தோம். ’கொட்டுக்காளி’ படத்தின் வெற்றி எனக்கு நிறைவாக இருக்கிறது. ’தாய் கிழவி’ கதை கேட்டதுமே சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

’தாய் கிழவி’ பார்த்துவிட்டு இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என கமல் சார் சிவகுமாரிடம் சொன்னார். ’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா மேம் தவிர வேறு ஆள் கிடையாது என்பதை படம் பார்த்துவிட்டு அனைவரும் சொல்வார்கள். ’சேயோன்’ படத்திற்கு அடுத்தும் மீண்டும் நான் சிவாவுடன் தான் படம் செய்ய இருக்கிறேன். எனக்கு பேரும் புகழும் கொடுத்த இந்தத் துறைக்கு நான் திரும்ப எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேனே தவிர யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி வர வேண்டும் என்ற எண்ணத்திலோ இல்லை. நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல்படுகிறேன்.

மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால், இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தடை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி வர நான் ரெடி. ’தாய் கிழவி’ படத்தை வரும் 27ஆம் தேதி குடும்பத்தோடு சென்று திரையரங்குகளில் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் சிவகுமார் முருகேசன், “என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. ராதிகா மேம் முதலில் தயங்கினாலும் கதை மீது நம்பிக்கை வைத்து சின்சியராக நடித்துக் கொடுத்தார். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த என் குழுவினருக்கு நன்றி. பசியும் பட்டினியும் ஒன்று போல தெரிந்தாலும் அதற்கு நடுவில் ஒரு கோடு இருக்கிறது. ’தாய் கிழவி’ எனும் ராஜ விருந்து கொடுத்ததோடு ‘சேயோன்’ எனும் நெல் கட்டையும் அடுத்து எனக்கு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிச்சயம் நல்ல விளைச்சல் காட்டுவேன். நன்றி” என்றார்.

நடிகை ராதிகா, “எல்லோருடைய அன்பு, நம்பிக்கை, ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் 48 வருடங்கள் கடந்தும் என்னை சினிமாவில் நிலைக்க வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார். சினிமாவிற்குள் வர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆனால், நீடித்து நிலைக்க உங்கள் உழைப்பு முக்கியம். என் சினிமா கரியரில் இன்னொரு திருப்புமுனை கொடுத்த சிவகார்த்திகேயன், சிவகுமார் இருவருக்கும் நன்றி. உண்மையில் இந்த கதை ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால், இந்த கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படிதான் நான் இதை பார்க்கிறேன். 4 மணி நேரம் ஹெவியான மேக்கப் போட்டு நடிக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் கமல்ஹாசன்தான். ’உன்னை தாண்டி அந்த கதாபாத்திரம்தான் திரையில் தெரிய வேண்டும்’ என்று கமல் என்றோ சொன்னது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் சிவகுமார் முருகேசனிடம் ஒரு ஃபயர் இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் சரியாக கண்டுபிடித்திருக்கிறார். வலியை உணர்ந்த பெண் சொல்கிற கதைதான் ‘தாய் கிழவி’. பெண்களாகிய நம்மை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். எல்லா துறையில் இருக்கும் பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா சார் ‘தாய் கிழவி’யாக நான் நடித்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. சீக்கிரம் அவர் உடல்நலன் தேறி வந்து இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். என்னை நடிகையாக்கிய என் அம்மா இந்தப் படத்தை பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. பெண் எம்.ஆர். ராதாவாக தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்குள் வந்தபோது என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இன்று பதில் சொல்கிறேன். நான் எம்.ஆர். ராதா மகள் என்று! வாய்ப்பிற்கு நன்றி” என்றார்.

 

Latest articles

வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் ‘பிச்சை’ குறும்படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

https://www.youtube.com/watch?v=OPJrp1W7flA மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கும் விதமாக 'பிச்சை' என்கிற பெயரில் குறும்படம் உருவாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை...

 பிரேக்ஃபாஸ்ட் மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடி! – நடிகர் ராணவ்

  'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர்...

என்னுடையது வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் வலுவான கதாபாத்திரம்! -சொல்கிறார் பிரேக்ஃபாஸ்ட் பட நாயகி ரோஸ்மின்

நடிகை ரோஸ்மின், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான...

காமெடி, சென்டிமென்ட், ஆக்சன்… முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகும் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

இளம் தலைமுறையின் கனவுகள், முயற்சி மற்றும் வெற்றியை மையமாக கொண்டு உருவாகும் 'பீட்சா பாய்ஸ்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. சேகர்...

More like this

வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் ‘பிச்சை’ குறும்படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

https://www.youtube.com/watch?v=OPJrp1W7flA மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கும் விதமாக 'பிச்சை' என்கிற பெயரில் குறும்படம் உருவாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை...

 பிரேக்ஃபாஸ்ட் மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடி! – நடிகர் ராணவ்

  'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர்...

என்னுடையது வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் வலுவான கதாபாத்திரம்! -சொல்கிறார் பிரேக்ஃபாஸ்ட் பட நாயகி ரோஸ்மின்

நடிகை ரோஸ்மின், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான...