HomeMovie ReviewL S S (love - subscribe - share) சினிமா விமர்சனம்

L S S (love – subscribe – share) சினிமா விமர்சனம்

Published on

சிவாவும் பூஜாவும் காதலிக்கிறார்கள். பூஜா சிறுவயதில் தன்னை விட்டுப் பிரிந்துபோன அம்மா காசியில் வசிப்பதாக அறிந்து அங்கு போய் பார்க்க தீர்மானிக்கிறாள். தனக்கு துணையாக சிவாவை சேர்த்துக் கொள்கிறாள். காசிக்கு போய்ச் சேர்கிறார்கள். பூஜா காணாமல் போகிறாள்.

பூஜாவின் அப்பா பெரும் பணக்காரர். அவர், தன் மகள் காணாமல் போனதற்கு அவளது காதலன்தான் காரணமாக இருப்பான் என நினைக்கிறார். போலீஸ் சிவாவைப் பிடித்து அடித்து துவைக்கிறது.

கதை இப்படி நம்மை பரபரப்பு மூடுக்கு கொண்டுவர, பூஜாவுக்கு என்னவானது என்பது அதிர்ச்சி தரும் கிளைமாக்ஸ்.

சிவாவாக அறிமுக நடிகர் அதவ் கிருஷ்ணா. பூஜாவாக புதுமுகம் சிம்ரன் அத்வானி.

உற்சாக காதலனாக, உச்சகட்ட ஆபத்திலிருந்து மீண்ட காதலியை ஒருமுறையாவது பார்த்துவிடத் துடிப்பவராக ஆதவ்வின் நடிப்பு பாஸ்மார்க் தருகிற அளவில் இருக்கிறது.

சிம்ரன் காதல், அப்பா மீதான பாசநேசம் என உணர்வுகளை சரியான விகிதத்தில் வெளிப்படுத்துகிறார்.

சிம்ரனின் அப்பாவாக வருகிறவருக்கு கார்ப்பரேட் வில்லன் கதாபாத்திரம். மகளின் காதலை தனது அந்தஸ்து கருதி எதிர்க்கிற வேலையை மிதமான மிரட்டலோடு செய்திருக்கிறார்.

படவா கோபி, வினோதினி என மற்றவர்கள் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்க, ஜாவா சுந்தரேசன் பெரிய மீசையோடு வந்து சிறியளவில் சிரிக்க வைக்கிறார்.

காசியை அங்குலம் அங்குலமாக சுற்றிக் காட்டுகிறது ஒளிப்பதிவாளர் என் எஸ் சதீஷ்குமாரின் கேமரா. அஸ்வமித்ரா பாடல்களுக்கான இசையை இதமூட்டும்படி தந்து, பின்னணி இசையில் பரபரப்புக்கு துணை நிற்கிறார்.

காதல் கதையாக துவங்கி, உறுப்பு திருட்டுக்கு குறிவைக்கும் கும்பல் அதுஇதுவென அதிரடி சமாச்சாரங்களை புகுத்தி திரைக்கதையின் வேகத்தை அதிகரித்திருக்கிறார் இயக்குநர் ஆர்.மகாலஷ்மி முருகன். அப்படி வேகமெடுக்கும் படத்தின் அத்தனை அம்சங்களும் ‘இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம்’ என்ற உணர்வையே தருகின்றன.

Rating 2.5 / 5

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this