HomeCinemaநாக சைதன்யாவின் புதிய படத்தின் தலைப்பு ‘தண்டேல்.' பிறந்தநாள் கொண்டாட்டமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியானதால் ரசிகர்களிடம்...

நாக சைதன்யாவின் புதிய படத்தின் தலைப்பு ‘தண்டேல்.’ பிறந்தநாள் கொண்டாட்டமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியானதால் ரசிகர்களிடம் அதிகரித்த எதிர்பார்ப்பு!

Published on

‘யுவ சாம்ராட்’ நாக சைதன்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, இயக்குநர் சந்து மொண்டேட்டியோடு நாக சைதன்யா இணைந்து பணியாற்றும் படத்திற்கு ‘தண்டேல்’ என பெயர் சூட்டப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தண்டேல் என்றால் ஆற்றல் மிக்கவர், கவர்ச்சியானவர், லட்சியத்தையும், கவனத்தையும் கொண்டவர் என பலவிதமாக குறிப்பிடலாம். ஒருவருக்கு ஏதாவது ஒரு உண்மையான ஆசை இருந்தால் அதற்காக அனைத்தையும் கொடுக்க முடியும் எனப் பொருள் கொள்ளலாம்.

‘தண்டேல்’ என்பது முற்றிலும் மாறுபட்ட பின்னணியைக் கொண்ட காதல் கதை. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். சூப்பர் ஹிட்டான ‘லவ் ஸ்டோரி’க்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இரண்டாவது படம் இது.

நாக சைதன்யா இந்த திரைப்படத்தில் மீனவராக நடிக்கிறார்.‌ இந்த தோற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார்.

ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் நீண்ட முடி மற்றும் தாடி உடன் முரட்டுத்தனமான தோற்றத்தையும் கொண்டிருக்கிறார். கையில் துடுப்புடன் ஒரு படகில் அமர்ந்திருக்கும் நாக சைதன்யா வேட்டி அணிந்து, தனது செதுக்கப்பட்ட உடலமைப்பை கதாபாத்திர தோற்றத்திற்காக தீவிரமாக பார்ப்பது போல் தோன்றுகிறார்.‌ அந்த போஸ்டர் படத்தின் தலைப்பை போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. பெரும்பாலும் அசலான இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

இப்படத்தின் கதையில் இசைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த காதல் கதைக்காக பிரத்யேகமாக இசையமைக்கிறார். ஷாம் தத் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிக்கிறார்.

Latest articles

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

பீப் சினிமா விமர்சனம்

புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் 'பீப்.' ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து...

டோரதி’யின் உலகையும் இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க ஸ்பெஷல் லாரி ரோடு ட்ரிப்! 

 ’டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, இளையராஜாவின் இசையுடன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும்...

More like this