HomeCinemaதிமுக'வில் முக்கியப் பதவியை பெற்ற பி டி செல்வகுமாருக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழா... நடிகர்...

திமுக’வில் முக்கியப் பதவியை பெற்ற பி டி செல்வகுமாருக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழா… நடிகர் விஜய்யின் உதவியாளர் செல்வத்திற்கு ரூபாய் 50,000 வழங்கி நெகிழ்ச்சி.

Published on

திரையுலகில் நடிகர் விஜய்யின் மேலாளராகவும் பல படங்களை வெளியிட்டு அசைக்க முடியாத இடத்தை பிடித்தவருமான பி டி செல்வகுமார் தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார். அவருக்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்காக திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில்,

முரளி ராம நாராயணன் (தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்) பேசியபோது, ”தேனாண்டாள் பிலிம்ஸ் க்கும் எனது தந்தை ராம நாராயணனுக்கும் மிகவும் வேண்டியவர் பல படங்கள் வெளிவர கடினமாக உழைத்தவர் பி.டி செல்வகுமார். இவர் கடின உழைப்பாளி மட்டுமல்ல பொறுமையாக அன்பினால் எதையும் சாதிக்க கூடியவர். அவரை ஃபாலோ பண்ணு என்று விஜய்யிடம் கூறி யி ருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். விஜயின் வளர்ச்சிக்கு இவர் முக்கிய காரணம் என்று எனது தந்தையும் கருமாரி கந்தசாமியும் சொல்லுவார்கள்.. பல பிரச்சினைக்குரிய படங்களை இலகுவாக பேசி முடிப்பார்.. இவருக்கு தி.மு.கவில் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து மனமார பாராட்டுகிறேன்” என்றார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும் சங்கத் துணைத் தலைவரும் லைக்கா நிறுவனத்தின் சி.இ.ஓ.வுமான தமிழ்க்குமரன் பேசியபோது ”பி.டி செல்வகுமார் சாருடன் 15 ஆண்டுகால நட்பு எனக்கு உண்டு.. பெரிய வியூக வகுப்பாளர் விஜய் போன்ற ஒரு நடிகரை உச்சத்துக்கு கொண்டுவர போராடியவர் பொறுமையும் பணிவும் தான் அவரது பலம்.. நான் தயாரித்த என்றென்றும் புன்னகை படத்திற்கு ஜீவா கால்ஷீட் தந்து பல உதவிகளை செய்தவர் அவர் அசாத்திய திறமை சாதுர்யமும் பல படங்கள் வெளிவர உதவியது… அவர் கலப்பை மக்கள் இயக்கம் மூலம் அரசு பள்ளிகளுக்கு 25 கலையரங்கங்கள் வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தது மிகப்பெரிய விஷயம்.. இன்று அவருக்கு மாநில வர்த்தக அணி துணை தலைவர் பொறுப்பு தி.மு.க வழங்கியுள்ளது இன்னும் அவருடைய உழைப்புக்கும் நேர்மைக்கும் பல பதவிகள் வரவேண்டும்

சோழா பொன்னுரங்கம் ”தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் சுறுசுறுப்பானவர் எந்த வேலையாக இருந்தாலும் முடியும் என்பர் அவரது பயணத்தில் எதுவும் நடக்க முடியாது என்று இல்லை பலருடைய வெற்றிக்கு ஏணியாக இருந்தவர்” என்றார்.

நடிகர் உதயா ”பிடி செல்வகுமார் நல்ல பண்பாளர் சினிமாவில் பல பிரச்சினைகளை ஊதி பெரிதாக்கி விடுவார்கள் ஆனால் அத்தனையும் பொசுக்கி சாதிப்பவர் அவர் விஜய் மட்டுமல்ல பல திரைப்படங்கள் வெளிவர உதவியவர் இரும்புத்திரை திரைப்படம் வெளிவர போராடி வெளிக்கொண்டு வந்ததை நான் அறிவேன் அவருக்கு தி.மு.க வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு கொடுத்தது சரியானதே இன்னும் பல அவரது சாதனைகள் தொடரனும்” என்றார்.

நடிகர் விஜய்க்கு டீ, ஜூஸ் சாப்பாடு கொடுத்து, குடை பிடித்து உதவியாளராக இருந்தவர் செல்வம். அவர்தற்போது வேலையிழந்து ஆபரேஷன் செய்யப்பட்டு அவஸ்தைப்படுகிறார்.

அவருக்கு பி.டி செல்வகுமார் ரூ 50000வழங்கினார். அவரும் அவரது மனைவி மகள் பெற்று கொண்டனர்  இது காலத்தால் செய்த உதவி விஜய் அவர்கள் என்னை கைவிட்டு விட்டார் ஆனால் பிடி செல்வகுமார் உதவியுள்ளார் ஏற்கனவே நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இறந்தபோது உதவினார் தாடி பாலாஜிக்கு உதவினார் வறுமையால் வாடும் பல நடிகர்களுக்கும் உதவியுள்ளார். இன்று எனக்கும் உதவி மட்டும் இல்லாமல் படத்தில் வேலை பார்க்க வேலையும் வாங்கி தந்துள்ளார்.

உதவி பெற்றுக்கொண்ட செல்வம் மனித நேயம் சாகவில்லை பி.டி செல்வகுமார் ரூபத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறது எனக்கு அவர்தான் கடவுளாக தெரிகிறார்” என்றார்.

Latest articles

வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் ‘பிச்சை’ குறும்படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

https://www.youtube.com/watch?v=OPJrp1W7flA மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கும் விதமாக 'பிச்சை' என்கிற பெயரில் குறும்படம் உருவாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை...

 பிரேக்ஃபாஸ்ட் மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடி! – நடிகர் ராணவ்

  'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர்...

என்னுடையது வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் வலுவான கதாபாத்திரம்! -சொல்கிறார் பிரேக்ஃபாஸ்ட் பட நாயகி ரோஸ்மின்

நடிகை ரோஸ்மின், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான...

காமெடி, சென்டிமென்ட், ஆக்சன்… முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகும் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

இளம் தலைமுறையின் கனவுகள், முயற்சி மற்றும் வெற்றியை மையமாக கொண்டு உருவாகும் 'பீட்சா பாய்ஸ்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. சேகர்...

More like this

வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் ‘பிச்சை’ குறும்படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

https://www.youtube.com/watch?v=OPJrp1W7flA மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கும் விதமாக 'பிச்சை' என்கிற பெயரில் குறும்படம் உருவாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை...

 பிரேக்ஃபாஸ்ட் மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடி! – நடிகர் ராணவ்

  'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர்...

என்னுடையது வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் வலுவான கதாபாத்திரம்! -சொல்கிறார் பிரேக்ஃபாஸ்ட் பட நாயகி ரோஸ்மின்

நடிகை ரோஸ்மின், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான...