HomeCinemaஇந்தப் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விசயங்களை சொல்லச் சொன்னால் எல்லா சம்பவங்களும் சுவாரஸ்யமானதுதான் என்று சொல்வேன்!...

இந்தப் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விசயங்களை சொல்லச் சொன்னால் எல்லா சம்பவங்களும் சுவாரஸ்யமானதுதான் என்று சொல்வேன்! -‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா உற்சாகம்

Published on

ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

படக் குழுவினருடன் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் என ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நடிகர் ஜீவா பேசுகையில், ”மேடையில் என்னுடன் இருக்கும் படக்குழுவினர் அனைவரும் நான்கு ஐந்து மாதங்கள் குமுளியில் ஒன்றாக குடும்பம் போல் தங்கி இருந்தோம். அனைவரும் ஒன்றிணைந்து நல்ல மனதுடன் இந்தப் படத்தில் பணியாற்றினோம். இந்த படம் வெளியாகி அனைவருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கிறது. தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் பணியாற்றினோம். படப்பிடிப்பு அனுபவங்களை ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து இருப்பதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதும் ஒரு காரணம். அதனால் இதற்கு முழு முதல் காரணமான இயக்குநர் நிதிஷுற்கு முதல் நன்றி. அவர்தான் இந்த படத்தின் ஹீரோ. அவர்தான் இங்கு கூடியிருக்கும் ஒவ்வொரு கலைஞர்களிடம் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வந்தார்.

எல்லோரும் இதனை சின்ன படம் என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய படம். இயக்குநர் முதலில் இந்தப் படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடும் என்று தான் சொன்னார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளத்திற்காக இன்னும் சற்று கூடுதலான நேரத்திற்கு படத்தின் கதை இருக்க வேண்டும் என்று விவாதித்தோம். படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களின் பங்களிப்பை பார்த்தவுடன் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநரும், கதாசிரியர்களும் மேம்படுத்துவார்கள்.

இதைத்தொடர்ந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய குமுளி மக்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஏனெனில் இந்த படம் சிறப்பாக வரவேண்டும்… விஸ்வரூப வெற்றியை பெற வேண்டும்… என்று சொல்லி, அதற்காக அந்த ஊர் மக்கள் இறைவனை பிரார்த்தித்து கிடா வெட்டினார்கள். படப்பிடிப்பு நிறைவடையும் தருணத்தில் குடும்பமாக பழகி, பிரியும் தருணத்தில் நாங்கள் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று சொல்லி நெகிழ்ச்சியுடன் கண்ணீர் விட்டனர். அது மறக்க முடியாத அனுபவம்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் பெரியவர்.. அந்த முதிய வயதிலும் எங்களுக்கு உச்சகட்ட காட்சியில் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை வழங்கி எங்களை ஆச்சரியப்படுத்தினார். அவரைப் பார்த்தவுடன் எனக்கும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நம்பிக்கை ஏற்பட்டது.‌ படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு ஏதேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால்.. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் நல்ல நினைவுகளாக பதிவாகி இருக்கிறது. தமிழில் நிறைய வெற்றி பெற்ற படங்களில் நடித்திருந்தாலும்.. இது போன்றதொரு பிரம்மாண்ட வெற்றி படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் நிதேஷுக்கு மீண்டும் நன்றி.

இந்தப் படத்தைப் பற்றி சுவாரசியமான விசயங்களை சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டால் எல்லா சம்பவங்களும் சுவாரசியமானது தான் என்று சொல்வேன்.

இந்த படத்திற்கும் படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களான கண்ணன் ரவி மற்றும் அவருடைய மகன் தீபக் ரவி ஆகிய இருவரும் மிகப்பெரிய ஆதரவை அளித்தனர்.

துபாயில் உள்ள அவருடைய அலுவலகத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். அவரை சந்தித்து இப்படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு உறுதியாக இப்படத்தை உருவாக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

இந்தத் தருணத்தில் நடிகர் வி டி வி கணேசுக்கும் நன்றி. அவர்தான் இயக்குநரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கதையைக் கேட்டவுடன் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்து விட்டேன். உடனே அட்வான்சும் கொடுத்து விட்டேன். அதன் பிறகு தான் தயாரிப்பாளரை தேடத் தொடங்கி, அதன் பிறகு தயாரிப்பாளர் கண்ணன் ரவியை சந்தித்தோம்.

வெங்கட் பிரபு மூலமாக கண்ணன் ரவியை கிரிக்கெட் போட்டி ஒன்றினை நட்சத்திரங்களுடன் இணைந்து பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் அவரை தொடர்பு கொண்டேன். அதற்காக அவர் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்க வைத்தார். அந்த மைதானத்தில் கண்ணன் ரவி மற்றும் அவரது மகன் தீபக் ரவி ஆகியோரின் விருந்தோம்பல் எங்களை வியக்க வைத்தது. அங்கிருந்துதான் தயாரிப்பாளருடனான எனது நட்பு தொடங்கியது.

என்னுடைய தந்தையார் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சவுத்ரி இதுவரை 99 திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இதுவரை அவருக்கு யாரும் பாராட்டு விழா நடத்தியதில்லை. துபாய் தமிழ் சங்கத்தில் கண்ணன் ரவி அவர்களின் ஆதரவுடன் அவருக்கு பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. அதுவே எனக்கு மிகப்பெரிய சாதனையாக இருந்தது. நான் வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய தந்தைக்கு இப்படி ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தியதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விழாவிற்கு வருகை தந்திருக்கும் என்னுடைய தந்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சௌத்ரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

 

Latest articles

வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் ‘பிச்சை’ குறும்படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

https://www.youtube.com/watch?v=OPJrp1W7flA மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கும் விதமாக 'பிச்சை' என்கிற பெயரில் குறும்படம் உருவாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை...

 பிரேக்ஃபாஸ்ட் மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடி! – நடிகர் ராணவ்

  'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர்...

என்னுடையது வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் வலுவான கதாபாத்திரம்! -சொல்கிறார் பிரேக்ஃபாஸ்ட் பட நாயகி ரோஸ்மின்

நடிகை ரோஸ்மின், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான...

காமெடி, சென்டிமென்ட், ஆக்சன்… முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகும் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

இளம் தலைமுறையின் கனவுகள், முயற்சி மற்றும் வெற்றியை மையமாக கொண்டு உருவாகும் 'பீட்சா பாய்ஸ்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. சேகர்...

More like this

வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் ‘பிச்சை’ குறும்படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

https://www.youtube.com/watch?v=OPJrp1W7flA மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கும் விதமாக 'பிச்சை' என்கிற பெயரில் குறும்படம் உருவாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை...

 பிரேக்ஃபாஸ்ட் மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடி! – நடிகர் ராணவ்

  'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர்...

என்னுடையது வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் வலுவான கதாபாத்திரம்! -சொல்கிறார் பிரேக்ஃபாஸ்ட் பட நாயகி ரோஸ்மின்

நடிகை ரோஸ்மின், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான...