HomeMovie Reviewகாந்தி டாக்ஸ் சினிமா விமர்சனம்

காந்தி டாக்ஸ் சினிமா விமர்சனம்

Published on

பணக் கஷ்டத்தில் சிக்கியிருக்கும் விஜய் சேதுபதி. கோடிகளில் புரண்டு கொண்டிருந்து, பிசினஸ் எதிரிகளால் சாமானிய மனிதனாகிவிட்ட அரவிந்த் சுவாமி இருவரும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பு அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. எப்படி மாற்றுகிறது என்பதும் அதனால் உருவாகும் விளைவுகளுமே வசனங்களே இல்லாத இந்த படத்தின் ஸ்க்ரீன்பிளே…

வறுமையில் தவித்தபடி, நாட்களை வெறுப்பாக கழித்தபடி காதலிலும் ஈடுபடும் விஜய் சேதுபதியின் உடல்மொழி பாவப்பட்ட மனிதனின் பிரதிபலிப்புக்கு பொருத்தமாக இருக்கிறது.

ஒரு கட்டம் வரை பணக்காரத்தனம், எதிரிகளால் வீழ்த்தப்பட்டபின் பந்தா தொலைத்த மனநிலை என அரவிந்த் சுவாமியின் பங்களிப்பு அசத்தல்.

விஜய் சேதுபதி மீது காதல் பார்வை வீசுவதாகட்டும், அவர் நேர்மை தவறி நடக்க முயற்சிக்கும்போது அது தவறென உணர்த்துவதாகட்டும் தன் கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார் அதிதி ராவ் ஹைதாரி.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஏதோ ஏதோ பாடல் மட்டும் மனதில் ஒட்டிக் கொள்கிறது. மற்ற பாடல்களில் இன்னும் அதிக வைப் தந்திருக்கலாம். பேச்சு மொழியே இல்லாத காட்சிகளுக்கு (பின்னணி) இசைமொழி உயிரூட்டியிருக்கிறது. கரண் பி ராவத் ஓளிப்பதிவு நேர்த்தி.

இருவேறு மனிதர்களின் உலகத்தில் காந்தி நோட்டு எப்படியெல்லாம் புகுந்து விளையாடுகிறது என்பதை மையப்படுத்தி கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இந்த பேசா படம், திரையுலகில் பேசுபொருளாவது நிச்சயம்; ஆடியன்ஸ் மனதைக் கவர்வது சந்தேகம்.

Rating 2.5 / 5

Latest articles

மனதுக்கு இதம் தரும் ‘வானே வானே…’ துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின்...

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு....

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

More like this